பொங்கல் தொகுப்பு பெற இன்றே கடைசி நாள்! மீதம் உள்ள பொங்கல் பரிசு என்ன ஆகும்? தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை: பொங்கல் தொகுப்பு பெற இன்றே கடைசி நாள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ அரிசி மற்றும் சர்க்கரையுடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பணம் மீதம் இருந்தால் சரக அலுவலகத்தில் ஒப்படைக்க ரேஷன் பணியாளர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 91% வரை பயனாளர்கள் பொங்கல் தொகுப்பை பெற்றுச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள நியாய விலைக்கடையில் 3 நாட்களுக்கு முன் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடிட பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. எல்லா ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழர்களின் அடையாளமாக அனைத்துத் தரப்பு மக்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு ஒரு பண்டிகை பொங்கல் திருநாளாகும் இந்த நன்னாள் அனைத்துத் தொழில்களுக்கும்.
ஏன். மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி, உணவளித்து வரும் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களாகிய அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நன்னாளை முன்னிட்டு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என்று கடந்த 2-1-2024 அன்று தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
பொங்கல் பரிசு: மேலும், முன்கூட்டியே திட்டமிட்டு உற்பத்தி செய்த காரணத்தினால் பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி-சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து, இவற்றை வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் வருமான வரி செலுத்துவோர் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர். சர்க்கரை அட்டைதாரர்கள். பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இயங்குகிறது: ரூ. 1000 மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வரும் நிலையில் ரேஷன் கடைகள் தொடர்பான முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. அதன்படி இன்றும் ரேஷன் கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ரேஷன் கடைகள் போகி என்பதால் விடுமுறை விடாமல் மக்கள் பணம் பெறுவதற்கு வசதியாக இயங்கும். இதுவரை 91 சதவிகித ரேஷன் அட்டைதாரர்கள் இதன் மூலம் பணம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மெசேஜ்: இந்த நிலையில்தான் ரூ. 1000 மற்றும் பொங்கல் பரிசு வழங்கியதில் மோசடி ஏதாவது நடந்துள்ளதா என்பதை கண்டுபிடிக்க மெசேஜ் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது..
பொங்கல் பரிசு தொகை : ரூ.1000 பெற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படுகிறது. ஒருவேளை ஒருவருடைய ரேசன் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால் அது தொடர்பாக புகார் அளிக்க ஒரு மொபைல் எண்ணும் வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications