விவசாயிகளுக்கு தலா ரூ 1.20 லட்சம் கடன் வசதி! தமிழக அரசு அசத்தல்! விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: தமிழகத்தில் கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கவும், பால் உற்பத்தியைப் பெருக்கவும் விவசாயிகளுக்குத் தலா 1.20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் புதிய திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இரண்டு கறவை மாடுகளை வாங்கிக் கொள்ளலாம்.

இதற்காக ஒரு மாட்டிற்கு 60 ஆயிரம் ரூபாய் வீதம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்தக் கடனுக்கான ஆண்டு வட்டி விகிதம் வெறும் 7 சதவீதமாகும். பயனாளிகள் தங்கள் பங்காக 5 சதவீதத் தொகையை மட்டும் செலுத்தினால் போதும். மீதமுள்ள கடனை மூன்று ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் சேர்ந்து நிதியுதவி பெற விரும்புவோர் பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்தவராகவும், 18 முதல் 60 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருப்பதோடு, அவர் ஆவின் அல்லது மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருப்பதும் அவசியமாகும்.
விருப்பமுள்ளவர்கள் சாதி, வருமானம், இருப்பிடச் சான்றிதழ்கள், ஆதார் மற்றும் ரேஷன் கார்டு நகல்களுடன் ஆவின் அலுவலகம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்தச் சலுகை வழங்கப்படும். இத்திட்டம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்குப் பெரிதும் உதவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, தேவையான ஆவணங்களுடன் இணைத்து, ஆவின் அலுவலகம் அல்லது கூட்டுறவு சங்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குகடன் உடனடியாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, அருகிலுள்ள கால்நடை பராமரிப்புத் துறை அலுவலகத்தையோ அல்லது TABCEDCO-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான tabcedco.tn.gov.in-ஐ தொடர்பு கொள்ளலாம்.
அது போல் மத்திய அரசின் லக்பதி தீதி யோஜனா, பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்குப் பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது. சுயஉதவிக் குழுக்களுடன் தொடர்புடைய பெண்களுக்கு ₹5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கும் இத்திட்டம், அவர்களைத் தொழில்முனைவோராக்கி, சொந்தக் காலில் நிற்க வழிவகுக்கிறது.
நவீன காலத்தில் பெண்கள் சமையலறைக்கு அப்பால் சென்று, பால் பண்ணைகள், குறுந்தொழில்கள் எனப் பல துறைகளிலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். நிதிப் பற்றாக்குறையால் தொழில் தொடங்க முடியாத பெண்களின் கனவுகளை நனவாக்கும் நோக்கில் மத்திய அரசு இந்த லக்பதி தீதி யோஜனாவைச் செயல்படுத்துகிறது. பெண் தொழில்முனைவோரின் உணர்வுக்கு வலு சேர்ப்பதே இதன் முதன்மை இலக்கு.
லக்பதி தீதி திட்டத்தின் மிக முக்கியமான அம்சம், ₹5 லட்சம் வரையிலான வட்டி இல்லாத கடன்கள். வழக்கமாக வங்கிக் கடன்களுக்கு அதிக வட்டி வசூலிக்கப்படும் நிலையில், இத்திட்டத்தின் கீழ் முழு வட்டிச் செலவையும் அரசாங்கமே ஏற்கிறது. இது பெண்களுக்கு நிதிச் சுமையின்றித் தங்கள் தொழில்களைத் தொடங்கவும், அவற்றை வெற்றிகரமாக இலாபகரமாக நடத்தவும் வாய்ப்பளிக்கிறது.
கடன் வழங்குவதுடன் நின்றுவிடாமல், பெண்கள் தங்கள் திறமைகளைச் சிறந்த வணிகங்களாக மாற்றிக்கொள்ள அரசு இலவச வணிகப் பயிற்சிகளையும் அளிக்கிறது. இதன் மூலம், கைவினைப் பொருட்கள், தையல், பால் வளர்ப்பு, காளான் சாகுபடி போன்ற பல்வேறு தொழில்களில் அவர்கள் ஈடுபடலாம்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், ஒவ்வொரு பெண்ணும் ஆண்டுக்குக் குறைந்தது ₹1 லட்சம் ஈட்டி, உண்மையான 'லட்சாதிபதி'யாக மாறுவதை உறுதி செய்வதாகும். இது அவர்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரத்தையும், சமூகப் பங்களிப்பையும் வழங்குகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற சில தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர் பெண்கள் ஒரு செயல்படும் சுயஉதவிக் குழுவில் (SHG) உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும், 18 வயது முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறத் தகுதியுடையவர்கள்.
லக்பதி தீதி திட்டத்தில் இணைய விரும்பும் பெண்கள் தங்கள் தொகுதி அல்லது மாவட்ட சுயஉதவிக் குழு அலுவலகங்களை அணுகலாம். ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் வலைத்தளத்திலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் கிடைக்கின்றன. விண்ணப்பிக்கும் போது, தொடங்க விரும்பும் வணிக வகையை விவரிக்கும் ஒரு சுருக்கமான வேலைத் திட்டத்தைச் சமர்ப்பிப்பது அவசியம். இப்படியாக நிறைய கடனுதவிகள், நிதியுதவிகள் என அரசு முன்னெடுத்து வருகின்றன. அதை சாமர்த்தியமாக பயன்படுத்த வாழ்வில் வளம் பெறுவோமாக!
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications