பொங்கல் போனஸ் அறிவித்த தமிழக அரசு! இவங்களுக்கெல்லாம் இல்லையாமே!அதிரடியாக வெளியான அரசாணை! முழு லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழர்திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு 'சி' 'டி' பிரிவு பணியாளர்களுக்கும், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் போனஸ் வழங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், யார் யாருக்கு போனஸ் வழங்கப்படும், யார் யாருக்கு வழங்கப்படாது என்பது குறித்து தமிழக அரசு தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில்," தமிழக அரசின் 'சி' 'டி' பிரிவு பணியாளர்களுக்கும், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போனஸ் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Tamil Nadu Government Pongal Bonus Employees

அதில், உலாமா உதவித் தொகைகள், மாநில சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான உதவித்தொகை பெறுபவர்கள், புகழ்பெற்ற அறிஞர்கள் மற்றும் சிறந்த மனிதர்களுக்கான சமூக உதவித்தொகைகள் பெறும் சிறப்பு ஓய்வூதியதாரர்கள்; தற்காலிக மிகை ஊதியம், சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் பெறுகிற கருணை அடிப்படையில் நியமனம் பெற்றுள்ள குடும்ப ஓய்வூதியதாரர்கள்;

'ஏ', 'பி' பிரிவு பதவிகளிலிருந்து ஓய்வுபெற்ற அனைத்து அரசு ஓய்வூதியதாரர்கள், அனைத்திந்தியப் பணி அலுவலர்கள், பல்கலைக்கழக மானியக் குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள அலுவலர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த போனஸ் உத்தரவு பொருந்தாது. இந்தப் பொங்கல் பரிசுத்தொகை, கடந்த 1-ந்தேதியிலோ அல்லது அதற்குப் பின்னரோ பணியிலிருந்து ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு அனுமதிக்கத்தக்கதல்ல.

'சி', 'டி' பிரிவு பணியாளர்களாக பணிபுரிந்து ஓய்வூதியம் பெறுவோர், மானியம் பெறும் கல்வி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், முன்னாள் கிராம பணியமைப்பு உள்பட அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் அதாவது 1-10-2017 முதல் சிறப்பு ஓய்வூதியமாக ரூ.2 ஆயிரம்பெறும் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், குறுஅங்கன்வாடி பணியாளர்கள்,

சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர், கிராம நூலகர்கள், பெருக்குபவர்கள், துப்புரவுப் பணியாளர்கள், துப்புரவாளர்கள், தோட்டக் காவலர், வேட்டைத் தடுப்பு காவலர், காவல் நிலைய துப்புரவாளர்கள் மற்றும் ஆயா உள்பட அனைத்து குடும்ப ஓய்வூதியதாரர்கள் (அதாவது ஓய்வூதியதாரர்கள், எந்த பணியாளர் பிரிவில் ஓய்வு பெற்றிருந்தாலும் அல்லது பணியிடையே மரணம் அடைந்திருந்தாலும்) அவர்களின் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். தற்காலிக ஓய்வூதியம் பெறும் அனைத்து சி மற்றும் டி பிரிவு ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த அரசாணை பொருந்தும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+