School leave: பொங்கலையொட்டி ஜனவரி 14 முதல் 18 வரை பள்ளிகளுக்கும் விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 14ஆம் தேதி 18-ஆம் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை வரும் 15ஆம் தேதி தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாளாம் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

பொதுவாக 4 நாட்கள் கொண்டாடப்படுவது இந்த பண்டிகையாகும். அந்த வகையில் தற்போது 14 ஆம் தேதி போகி, 15 ஆம் தேதி தை பொங்கல், 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல், 17ஆம் தேதி காணும் பொங்கல் ஆகும்.
இந்த நிலையில் அனைத்து பள்ளிகளுக்கு 15 ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை விடுமுறை என ஏற்கெனவே தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது 14 ஆம் தேதியான புதன்கிழமையும் போகியையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது பொங்கலுக்கு 4 நாட்கள் விடுமுறை, 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மொத்தம் 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதற்காக ஆண்டுதோறும் தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.












Click it and Unblock the Notifications