தட்டித் தூக்குது தமிழக அரசு..இன்னும் என்ன யோசனை? உடனே அப்ளை பண்ணுங்க! 1.5 லட்சத்தை அள்ளி தருதே TAMCO

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் ( TAMCO ) சார்பில் சுய உதவிக் குழுக்களுக்கான சிறு கடன் திட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. உறுப்பினர் ஒருவருக்கு ஆண்டு கடன் தொகையாக ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வழங்கப்பட இருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத் துறை மூலம் தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக சிறுபான்மையினர் வாழ்வில் ஏற்றம் காண தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் ( TAMCO ) சார்பில் கல்வி உதவித் தொகை தனிநபர் கடன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் 2025-2026 ஆம் ஆண்டில் சுய உதவி குழுக்களுக்கான சிறு கடன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Small Loan Scheme for Minority SHGs

சுய உதவி குழு

சிறுபான்மையின பெண்கள்/ஆண்கள் சுயஉதவிக் குழுக்களை அமைத்து, தனித்தனியே அல்லது சேர்ந்தோ சிறு வியாபாரம் / சிறு தொழில் செய்து தங்களது குடும்ப வருமானத்தை பெருக்கிக்கொள்ளும் வகையில் அவர்களது குழுக்களுக்கு காய்கனி கடை, மீன் வியாபாரம், பூ வியாபாரம், பலகாரக்கடை, தையல் கடை, கைத்தொழில்கள், சிறுவணிகம் போன்றவற்றை நடத்த கடன் பெறமுடியும்.

பெண்களுக்கு முன்னுரிமை

பயனாளி, சிறுபான்மை சுய உதவிக் குழுவில் அங்கத்தினராக இருத்தல் வேண்டும். குழுவில் குறைந்தது ஆறுமாதம் சேமித்தல் மற்றும் கடன் அளித்தல் பணியில் தொடர்ந்து நன்றாக செயல்பட்டு இருக்க வேண்டும். 60% சிறுபான்மையினராக அவசியம் இருத்தல் வேண்டும். எஞ்சியுள்ள 40% பிற்படுத்தப்பட்டோர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர் /சீர்மரபினர் / ஆதிதிராவிடர்/பழங்குடியினர்/ இதர வகுப்பினர் இடம் பெறலாம். குழுவில் அதிகபட்சமாக 20 அங்கத்தினர்களும், குறைந்தபட்சமாக 10 அங்கத்தினர்கள் இருத்தல் வேண்டும். சிறுபான்மையினர் குழுக்களில் பெண்கள் குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அளிக்கப்படவேண்டிய ஆவணங்கள்

1. மதத்திற்கான சான்று: சாதிச் சான்றிதழ் / பள்ளி மாற்றுச் சான்றிதழ் /சிறுபான்மையினர் மதம் குறித்து வழிப்பாட்டு ஸ்தலத்தால் அளிக்கப்பட்ட சான்று இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல்.

2. வருமானச் சான்றிதழ் நகல்.

3. இருப்பிட சான்றிதழ் நகல்.

4. ஆதார் எண் நகல்.

விண்ணப்பிக்கும் முறை

அந்தந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரகம் /மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் / மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் / நகர கூட்டுறவு வங்கி / தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி.

திட்டம் 1

உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்ச கடன் தொகையாக ஒரு லட்சம் வழங்கப்படும். வட்டி விகிதம் ஆண்டுக்கு 7 சதவீதம் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் தவணைத் தொகையை வட்டியுடன் திரும்ப செலுத்தலாம். நகர்ப்புறம் கிராமப்புற பகுதிகளாக இருந்தால் குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

திட்டம் 2

இரண்டாவது திட்டத்தின் கீழ் அதிகபட்ச கடன் தொகை உறுப்பினர் ஒருவருக்கு ஒன்றரை லட்சம் வழங்கப்படும். ஆண் பயனாளிகளுக்கு 10% வட்டி விகிதமும், பெண் பயனாளிகளுக்கு 8 சதவீத வட்டி விகிதமும் ஆண்டுக்கு கணக்கிடப்படும். அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை தவணைத் தொகையை வட்டியுடன் திரும்ப செலுத்தலாம். ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+