பழைய ஓய்வூதியம் தான் பாக்கி.. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இரண்டு நாளில் நடந்த சூப்பர் விஷயங்கள்
சென்னை: அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து இரண்டு நாளில் அறிவிக்கப்பட்ட இரண்டு நல்ல செய்திகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் உயர்வு தொடர்பாக அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது, இதன்படி பண்டிகை முன்பணமாக இனி 6000 வழங்கப்பட்ட நிலையில், இனி 5 லட்சம் கிடைக்க போகிறது. இதேபோல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அவர்கள் எதிர்பார்த்த பழைய ஓய்வூதியம் ஒன்றை தவிர பல்வேறு நல்ல விஷயங்கள் அவர்களுக்கு இந்த ஆண்டில் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த சில அறிவிப்புகள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் உயர்வு தொடர்பான அரசாணை கடந்த இரண்டு நாள் முன்பு வெளியிடப்பட்டது.

முதல் அறிவிப்பு
முன்பு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பணிக் காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணம் வழங்கப்படும். அதன்படி, பெண் ஊழியர்களுக்கு ரூ. 10,000, ஆண்களுக்கு ரூ. 6,000 வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
திருமண முன்பணம்
அதில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் திருமண முன்பணம் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறியிருந்தார். அதுகுறித்த அரசாணை இரண்டு நாள் முன்பு வெளியிடப்பட்டது. அரசாணை வெளியிட்டால் மட்டுமே ஒரு திட்டம் நடைமுறைக்கு வரும். அந்த வகையில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக இனி ரூ. 5 லட்சம் திருமண முன்பணமாக வழங்கப்பட உள்ளது.
இரண்டாவது அறிவிப்பு
அடுத்ததாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "கொரோனா பரவலின்போது நிதி நிலையை சுட்டிக்காட்டி அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாக பெறும் நடைமுறை 27.4.2020 முதல் நிறுத்தப்பட்டது. இதனை மீண்டும் செயல்படுத்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஈட்டிய விடுப்பு சரண்டர்
அதன்படி, ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணமாக பெறும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அக்டோபர் 1-ந் தேதி முதல் 15 நாட்கள் வரையிலான ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப்பலன் பெறலாம்.அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களுக்குள் பணியில் சேர்ந்து இருந்தால் அக்டோபர் 1-ந் தேதியில் இருந்தும், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பணியில் சேர்ந்து இருந்தால் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்தும், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் பணியில் சேர்ந்தால், 2026-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்தும் ஈட்டிய சரண் விடுப்பைப் பெறுவதற்கு தகுதி உண்டு.
யாருக்கு பொருந்தும்
இதேபோன்று ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பணி நியமனம் பெற்றிருந்தால் அடுத்த ஆண்டு ஜூலை 1-ந் தேதியில் இருந்து ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணப்பலனை பெறலாம். 2020-ம் ஆண்டு முதல் வருகிற செப்டம்பர் 30-ந் தேதிக்குள் பணியில் சேருவோருக்கு மட்டுமே 3 மாத சுழற்சி முறையிலான ஈட்டிய சரண் விடுப்பு திட்டம் பொருந்தும். இந்த உத்தரவு உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications