டீசல் விலை ஏறிடுச்சு.. தமிழக அரசு பஸ் கட்டணத்தை மாற்றியமைக்க தனி ஆணையம் வருகிறது? வந்தாச்சு அன்புமணி
சென்னை: எரிபொருள் செலவுக்கு ஏற்ப பஸ் கட்டணத்தை மாற்றியமைக்க தனி ஆணையம் அமைக்கும் பணியை போக்குவரத்து துறை துவக்கி உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.
தமிழகத்தில் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்கள் வாயிலாக, தினமும் 20,300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்களில் கிட்டத்தட்ட 1.76 கோடி பேர் பயணம் செய்து வருகிறார்கள்.. ஆனால், அரசு பஸ்களை இயக்க வேண்டுமானால், தினமும், 17 லட்சம் லிட்டர் டீசல் தேவையாக உள்ளது..

செலவுகள்: டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டணங்களும் அடிக்கடி உயர்ந்துவிடுகின்றன.. இதுபோன்ற பல்வேறு காரணங்களால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மாதாந்திர கூடுதல் செலவுகள் அதிகரித்தபடியே உள்ளது.. அதுமட்டுமல்லாமல், கடந்த 2023 - 24ம் நிதியாண்டில் மட்டும், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, 6,317 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அரசு புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தினமும் 17 லட்சம் லிட்டர் அளவிலான டீசலை கொள்முதல் செய்யப்படுவதால்தான், இந்த பஸ்களை பயன்படுத்த முடிகிறது.. எனினும், போக்குவரத்துக்கழகம் நஷ்டத்தில்தான் இயங்கி வருகிறது..
போக்குவரத்து துறை: அதனால்தான், எரிபொருள் செலவுக்கு ஏற்ப பஸ் கட்டணத்தை மாற்றியமைக்க, தனி ஆணையம் அமைக்கும் பணியை தமிழக போக்குவரத்து துறை துவக்கி உள்ளது. தமிழகத்தில் இயங்கும் பஸ் டிக்கெட்டுகளின் விலையை உயர்த்துவது குறித்த முடிவை எடுக்க இந்த தனி ஆணையம் அமைக்க தற்போது போக்குவரத்து கழக அதிகாரிகள் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ஒருவேளை இந்த ஆணையம் அமைக்கப்படுமானால், பஸ்கள் இயக்கப்படுவதற்கான செலவீனங்களை கணக்கிட்டு டிக்கெட் விலை, கூடுதலாக நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. இதனால் தமிழக அரசுக்கு போக்குவரத்து கழகங்கள் மூலம் வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது. .
இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் சொல்லும்போது, "அரசு போக்குவரத்து கழகங்களின் வருவாய், செலவு மற்றும் வருவாயை பெருக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்த வல்லுனர்கள் குழு, அரசிடம் புள்ளி விபரங்களை அளித்துள்ளது. டீசல் மற்றும் உதிரிபாகங்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. போக்குவரத்து பணியாளர்களுக்கு சம்பளத்தையும் உயர்த்த வேண்டி உள்ளது.
நிதி நிலைமை: கொரோனா லாக்டவுனுக்கு பிறகு, அரசு போக்குவரத்து கழகங்களின் நிதிநிலை மோசமாக இருக்கிறது. சில போக்குவரத்து கழகங்களில், பணியாளர்களுக்கு மாத சம்பளம் வழங்க, தமிழக அரசின் நிதியை எதிர்பார்க்க வேண்டி உள்ளது.
ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களை ஒப்பிடுகையில், கிலோ மீட்டருக்கு எட்டு முதல் 10 காசு வரை தமிழகத்தில் பஸ் கட்டணம் குறைவுதான்.. எனவே, மற்ற மாநிலங்களில் இருப்பது போல, கட்டணத்தை எரிபொருள் விலை நிலவரத்திற்கு ஏற்ப உயர்த்துவது குறித்து முடிவெடுக்க, தனி ஆணையம் அமைக்க, வல்லுனர் குழு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.
ஊதிய உயர்வு: தமிழ்நாட்டில் டீசல் விலை உயர்வு, தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஆகியவற்றுக்கு இணையாக பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க தனி ஆணையம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான ஆணையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியிருப்பது மிகுந்த பரபரப்பை தமிழகத்தில் ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து, எதிர்க்கட்சிகள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
அந்தவகையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "பேருந்து கட்டணங்களை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க தனி ஆணையம் அமைப்பதையும், அதன் வாயிலாக கட்டணங்களை உயர்த்துவதையும் தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, முறைகேடுகளை களைந்து, பாதுகாப்பான பேருந்துகளை இயக்குவதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
முறைகேடுகள்: ஏற்கனவே உள்ள அலங்கோலங்களை சரி செய்யாமல், போக்குவரத்து கழகங்களின் நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல்களையும், முறைகேடுகளையும் களையாமல், கட்டணத்தை மட்டும் உயர்த்துவதால் எந்த பயனும் ஏற்படாது. முறைகேடுகளை களைந்து, பாதுகாப்பான பேருந்துகளை இயக்குவதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி மேலும் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்!












Click it and Unblock the Notifications