Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பணமழை கொட்டுது.. அரசு பஸ் டிக்கெட் புக்கிங்கில் பம்பர் பரிசு.. ரிசர்வ் செய்து பயணித்தோருக்கு ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிக விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து அதிகமுறை பயணித்தவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது.

தமிழக போக்குவரத்து துறையை பொறுத்தவரை, பயணிகளின் வசதிகளுக்காகவே பல்வேறு வசதிகளை செய்து தந்து வருகிறது.. வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், பண்டிகை காலங்கள் உட்பட சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

ticket reservation setc buses tamil nadu government bus

ஆன்லைன் பதிவு: எனினும், ஆன்லைன் முன்பதிவு திட்டத்தில், வார விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களை தவிர்த்து, சாதாரண நாட்களில் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பயணிகள் தேர்வு செய்யப்பட்டு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சாதாரண நாட்களில் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பயணிகள் தேர்வு செய்யப்பட்டு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆகஸ்டு மாதத்திற்கான குலுக்கல் முறையில் 13 பயணிகளை சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்துள்ளார்.

ரொக்கப்பரிசு: அதன்படி, குரு பிரசாத், ராஜா ஞானபிரகாசம், சபரிகிரி ஆகியோருக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும், 10 பயணிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள 13 பயணிகளுக்கும் விரைவில் பரிசுகள் வழங்கப்படும்" என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இந்த அறிவிப்பானது பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.. காரணம், தமிழக அரசு போக்குவரத்து கழகங்களின் தொலைதுார பஸ்களில் பயணிக்க, www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் செயலியில், டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களை தவிர்த்து, இதர நாட்களில் முன்பதிவு செய்து, எளிதாக பயணம் செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த பரிசு தரப்படுகிறது.

குலுக்கல் முறை பரிசு: ஒவ்வொரு மாதத்திலும், கணினி குலுக்கல் முறையில் 3 பயணியருக்கு தலா, 10,000 ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கும் திட்டம், கடந்த வருடம் ஜனவரி முதல் அமலில் உள்ளது.. இதன்படி, கணினி வாயிலாக குலுக்கல் நடத்தி, 13 பேரை தேர்வு செய்து, முதல் 3 பேருக்கு தலா 10,000 ரூபாய், இதர 10 பேருக்கு தலா 2,000 ரூபாய் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த ஜூன் மாதத்திற்கான 13 பேரை, கணினி குலுக்கல் முறையில், சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் தற்போது தேர்வு செய்துள்ளனர்.. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 13 பேருக்கும் ரொக்கப் பரிசு விரைவில் வழங்கப்பட உள்ளதால், பொதுமக்களிடம் இந்த அறிவிப்பானது பெரும் கவனத்தை பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+