எண்ணூர் மக்களே அச்சம் வேண்டாம்.. அமோனியா வாயு கசிவை சரி செய்து விட்டோம்.. தமிழக அரசு விளக்கம்
சென்னை: எண்ணூர் பகுதி தற்போதுதான் கச்சா எண்ணெய் கழிவு பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டும் வரும் நிலையில், நேற்றிரவு திடீரென அமோனியா வாயு கசிந்ததால் மக்கள் கடுமையான மூச்சுத்திணறல் பிரச்னையை எதிர்கொண்டிருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு விளக்கமளித்திருக்கிறது.
சமீபத்தில் வந்த மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், சென்னையின் அனைத்து பகுதிகளும் மீண்டு விட்டன. ஆனால், எண்ணூர் பகுதி மட்டும் இன்னும் இதிலிருந்து மீளவில்லை. காரணம் கச்சா எண்ணெய் கழிவுகள்தான். எண்ணூர் பகுதியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இருக்கின்றன. மழை வெள்ளத்தின் போது இந்த ஆலையிலிருந்த எண்ணெய் கழிவுகள் மழை நீருடன் கலந்து வெளியேறியுள்ளது. இதனால் எண்ணூர் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டது.

இது பெரும் பஞ்சாயத்தாக வெடித்த நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியமும், எண்ணெய் கசிவுக்கு காரணமாக இருந்த சிபிசிஎல் நிறுவனமும் கடலில் கலந்த எண்ணெய் கழிவை அகற்ற தொடங்கியுள்ளன. ஆனால் தற்போது வரை இந்த கழிவுகள் முழுமையாக அகற்றப்படவில்லை. இது மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்திருக்கிறது. இந்த துயரத்திலிருந்து அவர்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது மற்றொரு அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது.
அதாவது எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள தனியார் ஆலையில் இருந்து நேற்றிரவு அமோனியா வாயு வெளியேறியதால் மக்கள் கடுமையான மூச்சுத்திணறல் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் விளக்கமளிக்கையில், "கரையிலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் கடலில் கப்பலிலிருந்து அமோனியா வாயு எண்ணூரில் உள்ள தொழிற்சாலைக்கு பைப் லைன் மூலம் அனுப்பப்பட்டிருக்கிறது.
இதிலிருந்து குறைவான அளவு அமோனியா திடீரென வெளியேறியதால்தான் இந்த மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. இந்த பிரச்னை சரி செய்யப்பட்டிருக்கிறது. எனவே மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று கூறியுள்ளனர். அமோனியா கசிவால் 15க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்தை பார்வையிட்ட சென்னை மாநகராட்சியின் துணை மேயர் மகேஷ்குமார், அமோனியா கசிவு சரி செய்யப்பட்டுவிட்டதை உறுதி செய்திருக்கிறார்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. அதாவது, "தனியார் தொழிற்சாலையிலிருந்து கடலுக்கு செல்லும் குழாயில் ஏற்பட்ட உடைப்பே வாயு கசிவுக்கு காரணம். வாயு செல்லும் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேபோல அமோனியா கசிவை சரி செய்ய போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. எண்ணூரின் சின்னகுப்பம், பெரியகுப்பம் பகுதியில் மிதமான அளவில் வாயு கசிவு ஏற்பட்டிருக்கிறது.
ஆலை வாசலில் 400 மைக்ரோகிராம்/எம்3 அளவில் இருக்க வேண்டிய அமோனியா 2090 அளவுக்கு இருந்துள்ளது (5.25 மடங்கு அதிகம்). தமிழக கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே அமோனியா வாயு குழாயை இயக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது" என கூறியுள்ளது.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே












Click it and Unblock the Notifications