"பிரிச்சி போடுங்க".. அரிசி அட்டைதாரர்களே.. கூட்டுறவு அங்காடியில் இனி "இந்த" பொருளும் கிடைக்கும்.. செம
சென்னை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரக்கூடிய வகையில், முக்கிய அதிரடி ஒன்றை தமிழக கூட்டுறவுத்துறை எடுத்துள்ளது.
சமீபகாலமாகவே மளிகை பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகிறது.. இதில் முக்கியமானது துவரம் பருப்பு.. கடந்த வருடம் முதலே துவரம் பருப்பு உற்பத்தி குறைவாகவே இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது.
கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களில் பெய்த பருவம் தவறிய மழையால் பருப்பு பயிர்கள் நாசமாகி உற்பத்தி பாதிக்கப்பட்டுவிட்டதாகவும், அதனால், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் துவரம் பருப்பு உற்பத்தி குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் சொன்னார்கள்..

அதிருப்தி: அதனால்தான், இப்போதுவரை துவரம் பருப்பு விலை உயர்ந்துகொண்டே வருகிறது. துவரம் பருப்பு பற்றாக்குறையை சமாளிக்க மத்திய அரசு 10 லட்சம் மெட்ரிக் டன் பருப்புகளை இறக்குமதி செய்யப்போவதாக கடந்த வருடமே சொன்னார்கள்.. ஆனாலும், கூட பருப்பு விலை உயர்ந்து வருகிறது.. தேவையை விட குறைவான சரக்குகளே வருவதால், இறக்குமதி செய்தாலும் துவரம் பருப்பு விலை கட்டுக்குள் வராது என்று தொழில்துறையினரும் கருத்து தெரிவித்தனர்.
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் துவரம் பருப்பு விலை 25 சதவீதம் உயர்ந்துள்ளதாம்.. தென்னிந்தியாவில் சாம்பார், கூட்டு, கடையல், வடை உள்ளிட்ட பல விதமான உணவு வகைகளை தயார் செய்ய துவரம் பருப்பே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வட இந்தியாவிலும் துவரம் பருப்பு சமையலில் பல விதங்களிலும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 44 லட்சம் டன் முதல் 45 லட்சம் டன் வரை துவரம் பருப்பு சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மொத்த விலையில் துவரம் பருப்பு கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்டது. இந்த ஆண்டு தற்போது துவரம் பருப்பு மொத்த விலையில் ரூ.129-க்கு விற்கப்படுகிறது. ஒரு ஆண்டில் மட்டும் 25 சதவீத அளவுக்கு விலை உயர்ந்து உள்ளது. தற்போது சில்லரை விலையில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.150-க்கு விற்கப்படுகிறது.

து.பருப்பு விலை: நம் தமிழகத்தை பொறுத்தவரை, தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு அதிகபட்சம், 1 கிலோ துவரம் பருப்பு, 25 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. ஏற்கனவே தக்காளி விலை விண்ணை முட்டிய நிலையில், இப்போது வெளிச்சந்தையில் கிலோ துவரம் விலை 150 ரூபாயை தாண்டியுள்ளது... இதனால் வெகுஜன மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.
அதனால், கூட்டுறவு விற்பனை இணையம் வாயிலாக, 100 டன் துவரம் பருப்பு வாங்கி, பல்பொருள் அங்காடிகளில் குறைந்த விலைக்கு விற்கும் நடவடிக்கையில் கூட்டுறவு துறை ஈடுபட போகிறதாம்.. இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் சொல்லும்போது, ஒரு வாரத்திற்குள், 100 டன் துவரம் பருப்பு வாங்கப்பட உள்ளது..
நிம்மதி: இதற்காக இன்னும் 2 நாட்களில் டெண்டர் கோரப்பட உள்ளது.. இதையடுத்து, வெளிச்சந்தையை விட கிலோவுக்கு, 30 ரூபாய்க்கும் குறைவாக விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளர். கூட்டுறவுத்துறையின் இந்த முடிவானது, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகுந்த நிம்மதியை தந்து வருகிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications