அரசு ஊழியர்களுக்கு வந்தாச்சு அறிவிப்பு..வங்கி கணக்கு இருக்குல்ல.. "ஊதிய நாளன்று"..தமிழக அரசு அதிரடி
சென்னை: வெள்ள நிவாரண தொகை வழங்குவது தொடர்பாக, அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறது.
புயல் காரணமாக மழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு 4 மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை, தமிழக அரசு சார்பில் ரேசன்கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், பாதிப்பை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது..
வருமான வரி: எனவே, டோக்கன் பெற்று பணம் வாங்க வரும் பயனாளிகளை விட, விண்ணப்பம் பெற்று நிவாரணம் கோரும் பொதுமக்கள் எண்ணிக்கையே, தினந்தோறும் அதிகரித்து காணப்படுகிறது..
வருமானவரி செலுத்துபவர்களுக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும்கூட, ஒரே குடியிருப்பில் வருமான வரி செலுத்தும் சிலருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றும், மற்றவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
விண்ணப்பம்: அதேபோல சில இடங்களில், ரேஷன் அட்டையில் விவரங்கள் ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளதால், ஆங்கிலம் தெரியாதவர்கள் லிஸ்ட்டில் தங்களது பெயர் இருக்கிறதா? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறினர். சில இடங்களில், விண்ணப்பம் இல்லாததால் பொதுமக்கள் திரும்பி செல்கிறார்களாம். சில இடங்களில், சம்பந்தப்பட்ட அலுவலர்களே விண்ணப்பம் வழங்குவதை குறைத்து வருகிறார்களாம்.
இந்நிலையில், வெள்ள நிவாரண பணிகளுக்காக, அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள், தங்களின் ஊதியத்தை அளிக்க , எழுத்துபூர்வமாக விருப்பம் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு தற்போது உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது. இதுகுறித்த உத்தரவில் உள்ளதாவது:
விருப்பம்: அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க, பல்வேறு பணியாளர் சங்கங்கள் விருப்பம் தெரிவித்திருக்கின்றன. இதனை அரசு ஏற்று, டிசம்பர் அல்லது ஜனவரி மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ய அனுமதி அளித்துள்ளது.
தங்களின் ஒரு நாள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கான ஊதியத்தை வழங்க விரும்பும் அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியர்கள், தங்கள் விருப்பத்தை, சம்பந்தப்பட்ட அலுவலரிடம் எழுத்துபூர்வமாக அளிக்க வேண்டும். பிடித்தம் மேற்கொள்ளப்படும் மாதத்தின் மொத்த ஊதியத்தை அடிப்படையாக வைத்து, ஒரு நாள் ஊதியம் கணக்கிடப்பட வேண்டும்.
தொகுப்பூதியம்: பணியாளர்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கான வங்கி சேமிப்பு கணக்கில், மின்னணு முறை வழியாக, ஊதிய நாளன்று நேரடியாக செலுத்தப்பட வேண்டும்.. உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசு மானியம் பெறும் நிறுவன பணியாளர்களுக்கும், தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் இவ்வாணை பொருந்தும்" என்று அரசு அந்த அறிவிப்பில் கூறியிருக்கிறது.












Click it and Unblock the Notifications