தமிழக அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனிமேல் கவலையேயில்லை.. உதயச்சந்திரன் ஐஏஎஸ் அதிரடியை பாருங்க
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான உத்தரவும், அரசாணையும் அதிரடியாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. என்ன அது?
கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, நிறைய நிதி நெருக்கடி அரசுக்கு ஏற்பட்டது. மக்களை பாதுகாக்கவும், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவும் வேண்டியிருந்தது. அதனால்தான், அரசு ஊழியர்களுக்கு சில சலுகைகள் தற்காலிகமாக மறுக்கப்பட்டன.

அதில் ஒன்றுதான் விமான பயணம்.. இதுகுறித்து மத்திய அரசு அப்போதே ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.. "அரசு ஊழியர்கள் அரசு முறை பயணமாக விமானத்தில் பயணிக்க வேண்டுமானால், தங்களின் பயணத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட வகுப்பில் குறைவான கட்டணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். 21 நாள் முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் அரசுக்கு செலவு மிச்சமாகும்" என்பது உட்பட, பல உத்தரவுகள் போடப்பட்டிருந்தன.
பொது மாறுதல்: தமிழக அரசும் தேவையற்ற செலவை குறைப்பதற்காக இப்படியான உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.. அரசு பணியாளர்களின் பொது மாறுதல் தடையை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு அதிகாரிகள் விமான பயணம் மேற்கொள்ள இருந்த தடையும் நீக்கம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த காலத்தில் நிதிச்சுமையை குறைக்க அரசு அதிகாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 2020-21 ஆண்டு காலகட்டத்தில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க அரசு அதிகாரிகளின் செலவை 50% தமிழ்நாடு அரசு குறைத்தது.
அதாவது, கடந்த 2020 - 21, 2021 - 22ம் ஆண்டுகளில், தமிழக அரசு பல்வேறு செலவு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அரசு துறைகள் மட்டுமல்லாமல், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி அமைப்புகள் என பலவற்றுக்கும் இப்படியான தடைகள் விதிக்கப்பட்டன..
திடீர் ரத்து: ஆனால், இப்போது தமிழக அரசின் நிதி நிலைமை ஓரளவு சீராகியிருக்கிறது.. எனவே, கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட செலவு கட்டுப்பாடுகளில் ஒருசிலது மட்டும் இப்போது ரத்து செய்யப்பட்டிருக்கின்றன..
குறிப்பாக, அரசு ஊழியர்கள் பயணப்படி, தினப்படி, விமானப் பயணம் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள், திரும்பப்பெறப்பட்டுள்ளன... அதேபோல, அரசு ஊழியர்கள் பொது மாறுதலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவும் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இருந்தாலும், சில செலவுகளில் சிக்கனத்தை கடைப்பிடிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவானது, எந்தவித மாற்றமுமில்லாமல் தொடர்கிறது. அதன்படி, புதிதாக உருவாக்கப்படும் அலுவலகங்களுக்கு, இப்போது பயன்பாட்டில் உள்ள அலுவலகங்களை பராமரிக்க தேவையான மரச்சாமான்கள் வாங்க மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை, தீயணைப்புத் துறை ஆகியவற்றுக்கு மட்டும், தேவையான உபகரணங்கள் வாங்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மற்ற துறைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதேசமயம், புதிய வாகனங்கள் வாங்குவதற்கான தடையும் தொடர்கிறது. பழுதடைந்த வாகனங்களுக்கு பதிலாக, புதிய வாகனங்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவையெல்லாம் அரசாணையாக, நிதித்துறை செயலாளர் உதயசந்திரன் வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், இதுதொடர்பாக உரிய வழிகாட்டுதல்களை ஒவ்வொரு துறை செயலாளர்களும், தங்களின் உயர் அதிகாரிகளுக்கு பிறப்பிக்க வேண்டும் என்றும் உதயசந்திரன் ஐஏஎஸ் குறிப்பிட்டுள்ளார்... அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சில தளர்வுகளும், முக்கிய உத்தரவுகளும் பெரும் கவனத்தை ஈர்த்து வருகினற்ன.












Click it and Unblock the Notifications