அரசு ஊழியர்கள் அதிரடி.. திடீர்னு முளைத்த மேட்டர்.. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் புது கோரிக்கை
சென்னை: தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு காலை, மதியம் உணவு வழங்க தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளை மக்களவை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தமிழகம், புதுச்சேரியில் நடக்க உள்ளது.. வாக்குப்பதிவு என்றாலே, அன்றைய தினம் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுவது வழக்கமான ஒன்றாகும்.. அந்தவகையில் இந்த முறையும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்..

அரசு ஊழியர்கள்: தேர்தல் நேரங்களில் பல்வேறு அரசுத்துறைகளில் பணியாற்றுவோர் தேர்தல் பறக்கும் படை குழுக்கள், தேர்தல் தினத்தன்று வாக்குப் பதிவு மையத்தில் பணி, தேர்தல் முடிவுகள் வெளியாகும் தினத்தன்று, வாக்குப் பதிவு எண்ணும் மையத்தில் பணி உள்ளிட்டவற்றில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
அந்தவகையில், மக்களவைத் தோ்தல் பணியில் சுமாா் 5 லட்சம் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் ஈடுபட போகிறார்கள்.. இதற்கெனவே இவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.
கோரிக்கை: இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்கள். இது தொடர்பாக தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் மற்றும் நிர்வாகிகள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை நேரில் சந்தித்து கடிதம் ஒன்றை தந்திருக்கிறார். அந்த கடிதத்தில் உள்ளதாவது:
தமிழ்நாட்டில் நாளை 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் பணிகளில் 3 லட்சத்திற்கும் மேலான ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். தேர்தல் பணியில், குறிப்பாக வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் தேர்தல் பணியாளர்களுக்கு உணவுப்படியாக 18, 19 ஆகிய இரண்டு நாட்களுக்கு ரூ.150 வீதம் ரூ.300 வழங்கப்படும்.
காலை, மதிய உணவு : இதில் தேர்தல் நாளான 19ம் தேதி அன்று வாக்குச்சாவடி பணியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்குச்சாவடியை விட்டு காலை, மதிய உணவிற்காக எங்கும் வெளியில் செல்ல இயலாது. கடந்த கால தேர்தல் அனுபவங்களில் பல்வேறு தருணங்களில் இவர்கள் உணவு உட்கொள்ளாமலே பணியாற்ற வேண்டிய கடுமையான சூழல் ஏற்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் தேர்தல் அலுவலர்கள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள். எனவே, வாக்குச்சாவடியில் தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களுக்கு 19ம் தேதி காலை, மதியம் உணவு வழங்குவதற்கான ஏற்பாட்டை செய்து தர மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு தக்க ஆணைகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications