“இனி டிசம்பர் வந்தா கவலை இல்லை”.. சென்னைக்கு ஸ்பெஷல் பேரிடர் மேலாண்மை ஆணையம் - தமிழக அரசு உத்தரவு!
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு என பிரத்யேக பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வெள்ளம், புயல் போன்ற பேரிடர் காலங்களில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து உடனடியாக பணிகளைச் செயல்படுத்துவதற்காக இந்த ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஏற்படும் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் பிரத்யேக ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேரிடர் ஆணையத்தில் சென்னை மாநகராட்சி, சென்னை காவல்துறை, மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், நீர்வளத்துறை உள்ளிட்ட துறை இடம்பெற்றுள்ளது.

பேரிடர் மேலாண்மை ஆணையம்
சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையின் கீழ் இந்த பேரிடர் மேலாண்மை ஆணையம் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், துணை ஆணையர், நல அலுவலர், சிஎம்டிஏ தலைமை செயல் அதிகாரி, நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் ஆகியோர் இந்த ஆணையத்தில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மை சட்டத்தில் சமீபத்தில் செய்யப்பட்ட திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் மாநில அளவிலான பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன், உள்ளூர் நகர்ப்புறங்களுக்கு ஏற்ப தனி ஆணையங்களை உருவாக்க அனுமதிக்கிறது.
சென்னை வெள்ளம்
தலைநகர் சென்னை, வங்காள விரிகுடாவை ஒட்டி அமைந்துள்ளதால், புயல், வெள்ளம், மற்றும் கனமழை போன்ற இயற்கை பேரிடர்களுக்கு ஆளாகிறது. ஒவ்வொரு ஆண்டும் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் சென்னை மாநாகராட்சிக்காக அமைக்கப்பட்டுள்ள, ஆணையம் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் சிரமங்களை போக்க உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேகமான நகரமயமாதல் காரணமாக சென்னையில் ஆகிரமிப்பு அதிகரித்து, நீர்நிலைகள் பல குடியிருப்பு பகுதிகளாக மாறியுள்ளன. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வடிய வழியின்றி தேங்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால் ஒவ்வொரு முறை சென்னையில் கனமழை கொட்டும்போதும், வீடுகள் வெள்ளக்காடுகளாக மாறுகின்றன. அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் வீடுகளிலேயெ முடங்கிப்போகும் நிலை நேரிடுகிறது.
டிசம்பர் வந்தாலே
மழை வெள்ளம் செல்ல வேண்டிய பாதைகளையும் குடியிருப்புகள் அடைத்து இருப்பதால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த காட்சிகளை சென்னையில் காண முடிகிறது. இதனால் சென்னை மக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். டிசம்பர் மாதம் வந்தாலே சென்னை மக்கள் பயப்படும் விஷயம் மழை வெள்ளத்துக்குத்தான்.
வெள்ள பாதிப்புகளில் சிக்கி வீடுகளில் முடங்கிய நபர்களுக்கு பேரிடர் காலங்களில் உதவிகள் கிடைப்பது என்பது பெரும் சிக்கலாக உள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் சூழலில் சென்னைக்கு மட்டும் முழு கவனம் செலுத்த முடிவதில்லை. இதனால் நாட்கணக்கில் கூட அத்தியாவசிய பொருட்கள் உட்பட பல தேவைகள் கிடைக்காமல் பொதுமக்கள் தவிக்கும் சூழலும் ஏற்படுகிறது.
தனி பேரிடர் மேலாண்மை ஆணையம்
இந்த சூழலை தவிர்க்கவே, சென்னை மாநகராட்சிக்கு என பிரத்யேகமான பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், உதவி தேவைப்படுவோருக்கும் உடனடியாக அரசு நிவாரண பணிகளையும், உதவிகளையும் செய்ய முடியும்.
மாநிலம் முழுமைக்குமான அமைப்பால் செயல்படுவதை விட விரைவாகவும், துல்லியமாகவும் சென்னைக்கு என அமைக்கப்பட்டுள்ள ஸ்பெஷல் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் திறம்படச் செயலாற்ற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் டிசம்பர் மாதத்தில் இந்த ஆணையத்தின் செயல்பாடுகளை கண்கூடாக காணலாம்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications