சுத்தமாகுது சென்னை பக்கிங்ஹாம் கால்வாய்.. வட சென்னைக்கே விடிவு.. ரெடியான மாஸ் திட்டம்
சென்னை: சென்னை பக்கிங்ஹாம் கால்வாயை சுத்தப்படுத்த புதிய திட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்துள்ளது. ஆர்கே நகர், தண்டையார்பேட்டை பகுதியில் தினமும் கலக்கும் 45 மில்லியன் கழிவுநீரை சுத்திகரிக்க 84 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
சென்னை மாநகரில் உள்ள ஆறுகள் எல்லாமே சாக்கடைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. எனினும் ஆறுகளில் கலக்கும் கழிவு நீரை குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் தீர்வு தான் எட்டப்படவில்லை.

வடசென்னை பகுதியில் பக்கிம்ஹாம் கால்வாய் மிக மோசமாக உள்ளது. ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் வெளியேறும் 45 மில்லியன் லிட்டர் கழிவு நீர் சுத்தரிக்கப்படாமலேயே பக்கிம்ஹாம் கால்வாயில் கலந்து வருகிறது. கடந்த 8 வருடங்களாக கொடுங்கையூர் எழில் நகர் மற்றும் கொருக்குப்பேட்டை நேதாஜி நகர் இடையே பாயும் பக்கிங்ஹாம் கால்வாயில் கழிவுநீரை அப்படியே வெளியேறி வருகிறது,
கொருக்குப்பேட்டை, வால்டாக்ஸ் சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம், சத்யவாணி முத்து நகர், தீவுத்திடல் வரை செல்லும் கழிவு நீர் இறுதியாக நேப்பியர் பாலம் அருகே கடலில் கலக்கிறது. இதனால் மெரினா கடற்கரை பகுதியும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது.
வடசென்னை பகுதியில் துர்நாற்றம், நிலத்தடி நீர் மாசுபடுவதற்கு இந்த கழிவுநீர்கள் முக்கியமா காரணமாக உள்ளது. கழிவுநீர் அதிகமாகவும், மிக மோசமாகவும்இருப்பதால் கொசுக்களின் பிறப்பிடமாக பக்கிம்ஹாம் கால்வாய் காணப்படுகிறது,.
வடசென்னை சுகாதாரமாக மாற வேண்டும் என்றால் பக்கிம்ஹாம் கால்வாயில் கலக்கும் 45 மில்லியன் கழிவு நீரை சுத்திகரித்தாக வேண்டும் . ஏனெனில் வடசென்னையில் இருந்து விடப்படும் கழிவுநீர் கூவம் ஆற்றில் கலக்கும் இடமான நேப்பியர் பாலத்தில் ஒரு ஆய்வு செய்யப்பட்டது,
அதாவது நேப்பியர் பாலத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நீரின்தரம் பரிசோதிக்கப்பட்டது. அதில் டிடிஎஸ் அளவு ஒரு லிட்டரில் 4,434 மில்லி கிராம், குளோரைடு அளவு 2,549 மில்லி கிராம் அளவு இருந்தது . நீரில் டிடிஎஸ் அளவு 2 ஆயிரத்து 100 மில்லி கிராம் அனுமதிக்கப்பட்ட அளவாகும். அதைவிட அதிமாக உள்ளதால் உயிரினங்கள் இந்த நீரில் வாழவே முடியாது. அந்த அளவிற்கு மோசமானது.
இந்நிலையில் பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் அதிலிருந்து பிரியும் பேபி கால்வாய், அதனுடன் இணையும் கேப்டன் காட்டன் கால்வாய் என 4 புறமும் கால்வாய்களால் சூழப்பட்டுள்ள கொடுங்கையூர் பகுதியில் சுகாதார கேடும் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் கழிவு நீர் கலப்பும், குப்பை கிடங்கும் தான்.
இந்நிலையில் ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை மண்டலங்களுக்கு உட்பட்டபகுதிகளில் சேகரமாகும் கழிவுநீர் குழாய் கட்டமைப்பு சேதமடைந்துவிட்டதே இப்படியான நிலைக்கு காரணம் ஆகும். இந்நிலையில் கழிவுநீரை முறையாக சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்ல ரூ.84 கோடியே 75 லட்சத்தில் புதிய திட்டம் ஒன்றை சென்னை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது.
சுமார் 45 மில்லியன் லிட்டர் கழிவுநீர் உருவாகும் நிலையில், எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு தினமும் 96 மில்லியன் லிட்டர் கழிவுநீரை கையாளும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்த மாநகராட்சி முன்னெடுத்து வருகிறது.
இந்த திட்டப்படி தண்டையார்பேட்டை இளைய தெரு தொடங்கி, கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் வரை 6.8 கிமீ நீளத்துக்கு 1000 மிமீ விட்டம் கொண்ட ராட்சத கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட உள்ளது. இத்திட்டத்துக்காக பக்கிங்ஹாம் கால்வாயில் சுமார் 45 மீட்டர் நீளத்துக்கு குழாய் பதிக்கப்பட உள்ளது. அத்துடன் பக்கிங்ஹாம் கால்வாய் அருகில் 8 மீட்டர் விட்டம் கொண்ட இரு கிணறுகளும் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டப் பணிகள் 3 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications