பெண்களுக்காக 43 கிலோ எடை கொண்ட ரூ 45 கோடி மதிப்பிலான தங்கத்தை வாங்கும் தமிழக அரசு
சென்னை: மூவலூர் ராமாமிர்தம் நினைவுத் திட்டத்தின் கீழ் திருமண உதவித் தொகை திட்டத்திற்காக 43 கிலோ எடை கொண்ட தங்க நாணயங்களை வாங்க தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. இதை சமூகநலத் துறை செய்துள்ளது. மொத்தம் 5,460 தங்க நாணயங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெண்கள் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு ஏராளமான திட்டங்களை கையில் எடுத்துள்ளது. அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, பெண்கள், மாற்றுத் திறனாளிகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நலத்திட்டங்கள் செய்கின்றன.

அந்த வகையில் திமுக அரசும் விடியல் பயணம், பெண்களுக்கு மாதம் ரூ 1000 உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நான் முதல்வன் திட்டம், உங்களுடன் ஸ்டாலின், உள்ளிட்ட திட்டங்களிலும் பெண்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் மூவலூர் ராமாமிர்தம் நினைவு திட்டம் தொடங்கப்பட்டுள்லது. அதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ 25 ஆயிரமும் 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டு வந்தது.
அது போல் பட்டப்படிப்பு முடித்த பெண்களுக்கு ரூ 50 ஆயிரமும், 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டது. இந்த திட்டம் கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு, 4 திருமண உதவித் திட்டத்தின் கீழ் தங்க நாணயம் மட்டும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் தமிழக அரசின் சமூகநலத் துறையால் செயல்படுத்தப்படும் 4 திருமண நிதியுதவித் திட்டங்களுக்கு 5,460 தங்க நாணயங்கள் கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. 22 கேரட்டில் 8 கிராம் தங்க நாணயங்களை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ 45 கோடியாகும். இந்த டெண்டர் கோர நேற்று முதல் அக்டோபர் 9ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications