Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நமக்கு சாதகமாக இல்லை.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ்.. கையை பிசைந்த டாப் வழக்கறிஞர்கள்.. என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாவட்ட ஆட்சியர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களுக்கு தடை விதித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். இந்த உத்தரவு, தங்களுக்கு கிடைத்துள்ள வெற்றியாக திமுக தலைமை கருதுகிறதாம்.

தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

Tamil Nadu government is not happy with the MHC order on ED summons petition against Collectors

அதைதொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த செப்டம்பர் 12ம் தேதி ஒரே நேரத்தில் 34 இடங்களில் சோதனை நடத்தினர்.

இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்த இந்த சோதனையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், ரூ.12.82 கோடி ரொக்க பணம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024 கிராம் தங்கம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சோதனையை தொடர்ந்து 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக கூறி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்த சம்மனை தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சில முக்கிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகியிருந்தார்.

இந்த பின்னணியில் மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசின் பொதுத்துறை செயலாளர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

வழக்கில் என்ன நடந்தது?: அந்த மனுவில், குஜராத், உத்தரபிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களில் ஆயிரக்கணக்கான கனிம வள கொள்ளை தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ள போது, அங்கு நடவடிக்கை எடுக்காமல், தமிழகத்தில் நடவடிக்கை எடுத்து அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாநில நிர்வாகத்தை சீர்குலைக்கும் வகையில் அமலாக்க துறை செயல்படுவதாகவும், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத் துறைக்கு அதிகாரவரம்பு இல்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது.

கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக, அதிகார பரவலை மீறும் வகையில், மாநில அரசு அதிகாரிகளை துன்புறுத்தும் நோக்கிலும், அரசு நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கிலும் அமலாக்கத் துறை செயல்படுவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டவிரோத மணல் குவாரிகள் தொடர்பாக மாநில அரசே விசாரித்து வரும் நிலையில்,
மாநில அரசு, புலன் விசாரணை அமைப்புகள் கோரிக்கை விதித்திருந்தாலோ, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலோ மட்டும் தான் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க முடியும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

மத்திய ஆளுங்கட்சி, ஆட்சி செய்யாத மாநிலங்களில் அமலாக்கத் துறையினரின் அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன எனவும், குறிப்பிட்டு குவாரிகளின் விவரங்களை மட்டும் கோராமல், மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகளின் விவரங்களை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால தடை உத்தரவு; சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்படாத, சாட்சியாக சேர்க்கப்படாத நிலையில், மாவட்ட ஆட்சியர்களை விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்ப முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது. மாநில அரசின் அனுமதியில்லாமல் அமலாக்கத் துறை மேற்கொள்ளும் இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்; மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்தும் மேலும் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடையில்லை என்று தெரிவித்தனர் நீதிபதிகள்.

திமுக வெற்றி: அமலாக்கத்துறையின் ஆட்சேபனை மனுவிற்கு அரசும், மாவட்ட ஆட்சியர்களும் விளக்கமளிக்க 3 வாரம் அவகாசம் வழங்கி வழக்கு விசாரணையை டிசம்பர் 21 தள்ளி வைத்தனர் நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் & சுந்தர் மோகன்.

மாவட்ட ஆட்சியர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களுக்கு தடை விதித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். இந்த உத்தரவு, தங்களுக்கு கிடைத்துள்ள வெற்றியாக திமுக தலைமை கருதுகிறதாம். ஆனால், அரசு வழக்கறிஞர்களோ, கலெக்டர்களுக்கு எதிரான சம்மன்களை ரத்து செய்யவும், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை கேட்டும் நாம் வழக்கு தொடர்ந்தோம். சம்மன்களுக்கு மட்டும் தடை கொடுத்துள்ள நீதிபதிகள், விசாரணைக்கு தடை கொடுக்கவில்லை.

விசாரணையை நடத்த அனுமதித்துள்ளது. தவிர, அமலாக்கத்துறையின் ஆட்சேபனை மனுவுக்கு பதிலளிக்க நமக்கு உத்தரவும் போட்டுள்ளது. அதனால், சம்மன் ரத்து செய்யப்பட்ட உத்தரவு நமக்கு சாதகமானதில்லை என்று தலைமைக்கு சொல்லியிருக்கிறார்களாம். டிசம்பர் 19-ந்தேதிக்கு விசாரணையை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

நமக்கு சாதகம் இல்லை: அன்றைய தினம் அமலாக்கத்துறையின் மனுவுக்கு எதிராக எந்த கோணத்தில் பதில் மனு தாக்கல் செய்வது என்கிற சட்டப் பாயிண்டுகளை ஆராய்ந்து வருகிறார்கள் அரசு வழக்கறிஞர்கள். இதற்கிடையே, சட்ட விரோத மணல் கொள்ளை தொடர்பாக தங்களுக்கு கிடைத்த அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் விளக்கங் களை பெறவே மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதாக அமலாக்கத்துறை சார்பில் வைத்த கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம், விளக்கம் பெறலாம் ; ஆனால் சம்மன் அனுப்பியது தவறு. சம்மனுக்கும் விளக்கம் பெறுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று கூறித்தான் சம்மன்களை ரத்து செய்தது.

ஆனால், விளக்கம் பெறலாம் என்று சொல்லியிருப்பதால், அமலாக்கத்துறைக்கு உதவி செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டு உயர்நீதிமன்றத்தை அணுகவும் அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாம். அதாவது, சம்மன் அனுப்பி கலெக்டர்கள் நம்மிடம் வந்தால் என்ன? நீதிமன்ற உத்தரவில் உதவி செய்வதற்காக வந்தால் என்ன? எப்படியாவது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வரவழைக்க வேண்டும் என்பதே அமலாக்கத்துறையின் திட்டமாக இருக்கிறது என்கிறார்கள் அத்துறைக்கு தொடர்புடைய வழக்கறிஞர்கள் வட்டாரம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+