தமிழ்நாட்டிலேயே முதல்முறை.. வீடு வீடாக கதவை தட்ட போகும் அதிகாரிகள்.. மிக முக்கிய கணக்கெடுப்பு
சென்னை: முதன்முறையாக, தமிழ்நாடு அரசு 38 மாவட்டங்களில் முக்கியமான சர்வே ஒன்றை நடத்த உள்ளது. இதுவரை இல்லாத வகையில் புதிய முறையிலான சர்வே ஒன்றை எடுக்க உள்ளது.
தமிழ்நாட்டில் வடமாநில ஊழியர்கள் அதிக அளவில் வேலை பார்க்கிறார்கள். அதே சமயம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் வேறு மாநிலங்களில், வேறு நாடுகளில் வேலை பார்க்கிறார்கள். பலர் பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, மும்பையில் வேலை பார்க்கிறார்கள்.

அதேபோல் அரபு நாடுகள், அமெரிக்கா, மேற்கு உலக நாடுகளிலும் கூட இவர்கள் வேலை பார்க்கிறார்கள். இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு 38 மாவட்டங்களில் முக்கியமான சர்வே ஒன்றை நடத்த உள்ளது.
சர்வே ஆய்வு; அதன்படி 30,000 வீடுகளில் இடம்பெயர்வு முறை குறித்து ஆய்வு செய்ய விரிவான ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது. பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்களின் தரவுகளை இந்த ஆய்வு வெளிப்படுத்தும்.
அதாவது உங்கள் வீட்டில் இருந்து ஒருவர் வெளிநாடு, வெளிமாநிலத்திற்கு சென்று வேலை பார்க்கிறாரா என்று கணக்கு எடுக்கப்படும். அதேபோல் ஏன் அங்கே வேலை பார்க்கிறார் என்றும் கணக்கு எடுக்கப்படும். இதன் மூலம் மக்கள் வெளியேறுவதற்கான காரணங்கள் கணக்கில் எடுக்கப்படும். இந்த ஆய்வு மாநிலத்திற்கு சிறந்த கொள்கைகளை உருவாக்கவும், ஒவ்வொரு மாவட்டத்தையும் சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் தொழில்களுடன் மேம்படுத்தவும் உதவும் என்று கூறப்படுகிறது.
ஜாதி ஆய்வு நடத்தப்படுமா?: சமீபத்தில் பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் இப்பொழுது வெளியாகி உள்ளன. மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் 36 % பிற்படுத்தப்பட்டோர் 27 % பட்டியல் சமூகத்தவர் 20% பழங்குடியினர் 1.6% இருப்பது தெரியவந்துள்ளது.
கோரிக்கை என்ன?; பொதுப் பிரிவினர் 15.5 % மட்டுமே இருப்பது தெரிய வந்திருக்கிறது. தற்போது பீகாரில் பட்டியல் சமூகத்திற்கு 16 % பழங்குடியினருக்கு 1% மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 12% பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 18 % இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 63 சதவீதம் உள்ள பிற்படுத்தப்பட்டோர் 30 சதவீத இடத்தை மட்டுமே இப்போது பெறுகின்றனர். 15.5% உள்ள பொதுப் பிரிவினர் 50% இட ஒதுக்கீட்டை அனுபவிக்கின்றனர்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும் கல்வியில், வேலைவாய்ப்பில், அரசியல் பிரதிநிதித்துவத்தில் உரிய இடங்களைப் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பெற முடியாத நிலை தொடர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் சாதிவாரி கணக்கெடுப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
உயரும் குரல்கள்; எஸ்சி- எஸ்டி பிரிவினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றாலும் 50% உச்சவரம்பு விதிக்கப்பட்டதால் அவர்களுடைய இட ஒதுக்கீடும் உயர்த்தப்பட முடியாத நிலை உருவாகிவிட்டது. 10 சதவீதம் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு பிறகு 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்ற குரல்கள் வலுவாக எழுந்து வருகின்றன.
பீகார் மாநில சாதிவாரி சர்வே இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமூக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். அரசு நிர்வாகத்திலும், உயர்கல்வியிலும், தொடர்ந்து தாங்கள் புறக்கணிக்கப்படுவது இனிமேலும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்ற கருத்தும் வைக்கப்பட்டு வருகிறது. இதேபோன்ற ஆய்வு தமிழ்நாட்டிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications