Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சம்பளம் + விடுமுறை.. ஓட்டுப்போட இன்று ஊதியத்துடன் லீவு தரலயா? இந்த நம்பர் குறிச்சுக்குங்க.. சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் ஓட்டுப்பதிவு செய்யும் வகையில், அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

எம்பி தேர்தல் இன்று ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜுன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது.

Tamil Nadu Government Labour Department Big Instruction and Holiday with pay for Polling today

100% வாக்குப்பதிவு: இந்த முறை 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தியே, மாநிலம் முழுவதும் பல்வேறு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையமும், மாவட்ட நிர்வாகமும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர்.

அதேபோல, பொது மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் ஓட்டுப்பதிவு செய்யும் வகையில், அவர்களுக்கு பிடித்தம் ஏதுமின்றி ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை வழங்க வேண்டும் அனைத்து நிறுவனங்களுக்கும் வாக்களிக்கும் விதமாக விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இருப்பிடம்: அதுமட்டுமல்ல, அவரது பணியிடம் ஒரு தொகுதியில், இருப்பிடம் ஒரு தொகுதியில் இருந்தாலும் விடுப்பு வழங்க வேண்டும் என்றும் தேர்தல் தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்க வசதியாக மாநில மற்றும் மாவட்ட கட்டுப்பாட்டு அறைகள் தொழிலாளர் துறையால் ஏற்படுத்தப்பட்டிருந்தது.. அதேபோல, தொழிலாளர் நலத்துறையும் இதே கோரிக்கையை முன்வைத்து, "தேர்தல் நடைபெறும் நாளன்று விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்திருந்தது.

விடுமுறை: இன்று 19.4.2024 அன்று விடுமுறை அளிக்க தவறும் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் இதுகுறித்து புகார் அளிக்க தொழிலாளர் துறை சார்பில் அந்தந்த மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருப்பதால், விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் தொடர்பாக தொழிலாளர்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக் கொண்டிருந்தது.
இன்று வாக்குப்பதிவு என்பதால், தமிழகத்தின் மாவட்டங்களில், கட்டுப்பாட்டு அறை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.. இன்றைய தினம் விடுமுறை அளிக்காத நிறுவனங்களை கண்காணிக்க மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களிலும் ஒருங்கிணைப்பு அலுவலர் (நோடர் ஆபீசர்) தலைமையில் 3 சார் நிலை அலுவலர்கள் கொண்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருக்கிறது.

புகார்கள்: விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து இந்த கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து புகார் தெரிவிக்கலாம். யாரை தொடர்பு கொண்டு புகார் தரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் உதவி ஆணையர் கார்த்திகேயன் (94453 98761), துணை ஆய்வாளர் விமலா (99425 41411), கண்காணிப்பாளர் சரவணன் (63813 43552), ராமநாதபுரத்தில் மலர்விழி (94453 98764), பரமக்குடி உதவியாளர் முனியசாமி (86087 72646), இளநிலை உதவியாளர் ஜோதி முருகன் ( 85259 73357), சிவகங்கையில் உதவி கமிஷனர்கள் முத்தம்மாள் (94453 98767), வெங்கடேஸ்வரன் (94426 13330) ,ராஜேஸ்வரி (86080 53352), விருதுநகரில் உதவி கமிஷனர் மைவிழிச்செல்வி (94453 98763), துணை ஆய்வாளர் சதாசிவம் 89398 62505), மணிகண்டன் 91594 43377) நியமிக்கப்பட்டுள்ளனர்.

எச்சரிக்கை: விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் இணை ஆணையர் பெ.சுப்பிரமணியன் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+