Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்க பத்திரப் பதிவு செய்ய போறீங்களா.. சொத்து விற்பனை பத்திர பதிவில் திடீர் மாற்றம்.. தமிழக அரசு நச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு, பத்திரப்பதிவு குறித்து, பொதுமக்களின் நன்மைக்காக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. இந்த உத்தரவானது, மக்கள் மத்தியில் பெருத்த மகிழ்ச்சியையும், நிம்மதியையும் ஏற்படுத்தி வருகிறது.

பொதுமக்களின் வசதிக்காக, பத்திரப்பதிவு முறைகளில் எத்தனையோ மாற்றங்களும், அறிவிப்புகளும் செய்யப்பட்டு வருகின்றன.. சமீபத்தில்கூட ஒரு நடைமுறை குறித்த செய்திகள் வெளிவந்தது.

பணிகள் தாமதம்: அதாவது, ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலகத்திலும், ஒரு நாளைக்கு, 100 முதல், 200 டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.. இந்த டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில், விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களுடன் ஆஜரானால், உடனடியாக பத்திரப்பதிவு பணிகள் முடிந்து விடும். இதில், குறிப்பிட்ட நேரத்திற்கு விண்ணப்பதாரர்கள் வராதது, பணிகள் தாமதம் போன்ற காரணங்கள் ஏற்பட்டால், அந்த டோக்கன் நம்பர், அதே நாளில் வேறு நேரத்துக்கு மாற்றப்படும்.

இவ்வாறு நேரம் தவறும் டோக்கன்களுக்கு உரிய நபர்கள், ஒரே நேரத்தில் வருவதால், மாலையில் நீண்ட நேரம் பத்திரப்பதிவு நடத்தப்பட வேண்டியிருக்கிறது.. மேலும், இதனால், சார் - பதிவாளர்களுக்கும், பொது மக்களுக்கும் நிறைய சிரமம் ஏற்படுத்துவதாகவும் உள்ளது.. இப்படியொரு சங்கடம் வராமல் இருக்க புது நடைமுறையை கொண்டுவர யோசனை உள்ளதாம்.

tamil nadu government new announcement and public need not take money for bond registration

டோக்கன் சிஸ்டம்: அதன்படி, டோக்கனில் குறிப்பிடப்பட்ட நேரத்தில் பதிவு நடக்கவில்லை என்றால், அந்த டோக்கனை மறுமுறை பயன்படுத்த முடியாதபடி ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.. இதனால், தேவையின்றி அன்றைய தினம் முழுவதும் காத்திருக்கும் கூட்டமும் தவிர்க்கப்படும். இது தொடர்பாக, பதிவுத்துறை அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகவும, இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொன்னார்கள்.

அதேபோல, இன்னொரு அதிரடி தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.. அதாவது, தமிழகத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகப் பணிகள் அனைத்தும் தற்போது கணினிமயமாக்கப்பட்டுவிட்டன என்றும், இதனால், பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க தேவையில்லை என்றும், ஜஸ்ட் 15 நிமிடத்திற்குள்ளேயே பதிவு பணிகள் முடிவடைந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மூர்த்தி அதிரடியாக தெரிவித்துள்ளார்.

பத்திரப்பதிவு : அதுமட்டுமல்ல, பத்திர பதிவிற்கு பொதுமக்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து தொகையையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும் என்றும், ஆன்லைன் மூலமாக பணம் செலுத்துவதற்கான அனைத்து ஏடிஎம் கார்டு வசதிகளும், சார் பதிவாளர் அலுவலகங்களில் செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற நடைமுறையால், இனிமமேல், சார் பதிவாளர் அலுவலகங்களில் இனி நேரடி பணவர்த்தனைகள் எதுவும் நடக்காது என்றும், முழுக்க முழுக்க ஆன்லைன் மூலமாகவே அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை பொதுமக்கள் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி: இதனால், பத்திரப்பதிவிற்கு வரும்போது, பொதுமக்கள் கையில் பணம் எடுத்து வரதேவையில்லை என்றும், பத்திரப்பதிவிற்கு அதிகாரிகள் பணம் கேட்டால் பொதுமக்கள் யாரும் வழங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. இதையும் மீறி, புகார்கள் எங்காவது இருந்தால், உடனடியாக, பொதுமக்கள், இணைபதிவுத்துறை தலைவர் அல்லது பதிவுகளை செயலருக்கு அனுப்ப வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எதிர்பார்ப்பு: மேலும், ஒவ்வொரு அரசுத் துறையிலும் பணி மூப்பு அடிப்படையில் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே, சீனியாரிட்டியில் பணி மூப்பு மூலம் பதவி உயர்வு கிடைக்கும் நம்பிக்கையில் பல அரசு ஊழியர்கள் ஆர்வத்துடன் காத்துக்கிடக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+