அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறும் நடைமுறை நிறுத்தி வைப்பு - அரசாணை
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறும் நடைமுறையை நிறுத்தி வைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை : ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறும் நடைமுறையை நிறுத்தி வைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு விடுப்பு விதிகள்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் ஈட்டிய விடுப்பாக அறிவிக்கப்படுகிறது. அந்த ஆண்டில் 15 நாட்கள் ஈட்டிய விடுப்பை எடுக்காதவர்களுக்கு, ஆண்டு முடிவில், 15 நாட்களுக்கான முழு ஊதியமும் எவ்விதப் பிடித்தமும் இன்றி வழங்கப்படும்.
இதை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2 ஆண்டுகளுக்கு சேர்த்து 30 நாட்கள் அதாவது ஒரு மாத ஊதியமாகவும் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளும் நடைமுறை உள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தடுப்பு பணிகளுக்கு அதிக அளவில் நிதி தேவைப்பட்டதால், ஓராண்டுக்கான ஈட்டிய விடுப்பை நிறுத்தி வைக்க தமிழக அரசு முடிவெடுத்து கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. கடந்த 2021ஆம் ஆண்டும் இதே நடைமுறை நீடித்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றி பெறும் நடைமுறையை நிறுத்தி வைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications