ஜாதி பிரிவினை பார்த்தால் ஆக்சன்தான்.. உடனே சஸ்பெண்ட்தான்.. பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ஜாதி பிரிவினை பார்க்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த பள்ளி மாணவர் சின்னத்துரை வேறு ஒரு சாதியை சேர்ந்த மாணவர்களால் கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டின் மனசாட்சியையே உலுக்கியுள்ளது.

Tamil Nadu government order against teachers who shows caste separation in schools

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பட்டியலின பள்ளி மாணவர் சின்னத்துரையும் அவருடைய சகோதரியும் சக மாணவர்களால் தாக்கப்பட்டார். பள்ளி படிக்கும் போதோ ஜாதி பாகுபாடு பார்த்து மாணவர்கள் செயல்படுவது கடுமையான அதிர்ச்சியை பலருக்கும் ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு முன்னரும் சாதிய மோதல் சம்பவங்களில் 12-17 வயது சிறார்கள் ஈடுபட்டிருந்தாலும், அது பள்ளியின் மூலமாக உருவாகி இருக்கவில்லை. ஆனால் இந்த சம்பவம் முழுக்க முழுக்க பள்ளியிலிருந்துதான் வெடித்து கிளம்பியிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இந்த சம்பவத்திற்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நீதிபதி சந்துரு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் ஜாதி பிரிவினை பார்க்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

அறிவிப்பு: அதன்படி மாணவர்கள் யாரும் ஜாதி பார்க்க கூடாது. ஜாதி பார்க்கும் ஆசிரியர்கள், ஜாதி பிரிவினையை தூண்டும் வகையில் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் பள்ளியில் இருந்து டிரான்ஸ்பர் செய்யப்படுவார்கள். ஆசிரியர்கள் யாரும் குறிப்பிட்டு பேசுவது, பாகுபாடு காட்டுவது கூடாது என்று முதன்மை கல்வி அலுவலர் சார்பாக எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

மீறி இது போல பாகுபாடு காட்டினால் அவர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதிரடி மாற்றங்கள்: தமிழ்நாடு பள்ளிகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் காலை உணவு திட்டத்திற்கு தேசிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துஅரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி 31,008 பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 17 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு கையில் எடுத்திருக்கும் அஸ்திரம் ஒன்று தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுப்படுத்தி, 31,008 பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 17 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைக்கும் விதமாக, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் பிறந்த ஊரான நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+