10ம் வகுப்பு மாணவர்களுக்கு ‛குட்நியூஸ்’.. கணக்கு புத்தகத்தில் ‛இந்த’ பாடம் நீக்கம்! அரசு அதிரடி
சென்னை: பத்தாம் வகுப்பு கணித பாடத்தில் இருந்து சீட்டுக்கட்டு கணக்கு பகுதி நீக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் நடவடிக்கைக்கு நடுவே இந்த பாடம் புத்தகத்தில் இருந்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதால் சீட்டுக்கட்டு கணக்கு தொடர்பான 5 கேள்விகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாடி ஏராளமானவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை பறிகொடுத்தனர். இதையடுத்து ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதற்கிடையே தான் பள்ளி பாடங்களில் இடம்பெற்றிருக்கும் சூதாட்டம் சார்ந்த பாடப்பிரிவுகளை நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன. அதாவது பள்ளி பாடப்புத்தகத்தில் ஆன்லைன் ரம்மி தொடர்பான சில தகவல்கள் இடம்பெற்றிருந்ததால் இந்த கோரிக்கை எழுந்தன. இதையடுத்து 6ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த அந்த பாடப்பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டன.
இருப்பினும் கூட 10ம் வகுப்பு கணித பாடத்தில் ‛ஃபிளையிங் கார்ட்ஸ் சம்ஸ்' என்ற பிரிவில் சீட்டுக்கட்டு கணக்குகள் இடம்பெற்று இருந்தது. சீட்டுக்கட்டும் சூதாட்டம் சார்ந்த விளையாட்டு என்பதால் அதனையும் நீக்க கோரிக்கைகள் எழுந்தன. இதற்கு தமிழக அரசு செவிசாய்த்துள்ள நிலையில் 10ம் வகுப்பு கணித பாடத்தில் உள்ள சீட்டுக்கட்டு கணக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

வரும் கல்வியாண்டு முதல் இந்த பாடம் 10ம் வகுப்பு கணித புத்தகத்தில் இடம்பெறாது. அதற்கு பதிலாக புதிய பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது சீட்டுக்கட்டு கணக்கு பகுதியில் ஏற்கனவே 5 கேள்விகள் இடம்பெற்று இருந்தன. தற்போதைய நீக்கத்தால் அந்த 5 கேள்விகளுக்கு பதில் புதிதாக 2 கேள்விகள் பாடப்புத்தகத்தில் இருந்து சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக பள்ளிகள் திறப்பு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. கோடை விடுப்பு முடிந்து பள்ளிகள் ஜூன் 1ல் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு வெயில் அதிகரித்ததால் பள்ளி திறப்புக்கான தேதி ஜூன் 7க்கு மாறியது. தற்போது தொடரும் வெயிலால் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சமையல் கேஸ் சிலிண்டர் 10 நாள் ஆகியும் வரல.. சென்னையில் இல்லத்தரசிகள் கடும் அவதி.. புக் செய்துமா? -
தமிழ்நாட்டில் 1-9 வகுப்பு மாணவர்களுக்கான கோடை விடுமுறை அறிவிப்பு! பள்ளிகள் எப்போது தொடக்கம்? விவரம் -
Low Pressure Trough: நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பாதை.. 15-ம் தேதி வரை மழை விடாது! சென்னையில் இன்று மழை வெளுக்கும் -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
காடுவெட்டி குரு மகள் பேச்சை பார்த்தீங்களா? அன்புமணிக்கு டபுள் டென்ஷன்.. வன்னியர் ஓட்டு யாருக்கு லாபம் -
நைஸா பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு.. தவெக விஜய் அரசியலில் அடுத்தடுத்த அதிர்ச்சி திருப்பம் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. சென்னையில் 2 நாளைக்கு விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் எச்சரிக்கை -
எடப்பாடி பெயரை கூட.. மோடி சொல்லாதது இதற்குத்தானா? பாஜகவின் ‘மாஸ்டர் பிளான்’ ஸ்கெட்ச்.. போச்சு -
தூண்டில் போடும் டெல்லி! தன் பாட்டுக்கு விஜய்.. இப்ப தான் ஆட்டம் ஆரம்பம்.. 2026-ன் கிங் மேக்கர் யார்? -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
CRPF Job: மத்திய ரிசர்வ் காவல் படையில் 9,195 கான்ஸ்டபிள் பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! 69 ஆயிரம் சம்பளம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம்












Click it and Unblock the Notifications