அற்புதம்.. பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக அரசின் புது அறிவிப்பு.. இனி நிம்மதியா இருக்கலாம்
சென்னை: முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. இது பள்ளி மாணவர்களுக்கு நிம்மதியையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 15ம் தேதி மறைந்த முதலமைச்சர் அண்ணா பிறந்தநாள் அன்று, 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்காக, 2023-24 நிதியாண்டில் ரூ.404.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த அரசாணையும் வெளியாகியிருந்தது.

காலை உணவுத்திட்டம்: இந்நிலையில், இந்த திட்டம் அடுத்தக்கட்ட விரிவாக்கத்துக்கு நகர்கிறது.. வரும் கல்வி ஆண்டு முதல், 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட உள்ளது.
மறைந்த முதல்வர் கருணாநிதி பயின்ற திருக்குவளை பள்ளியில், முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க போகிறார். 31,000 பள்ளிகளில் படிக்கும், 15 லட்சம் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்போவதால், அதற்கு, 2 மாதங்களுக்கு தேவையான ரவை, சம்பா ரவை, சேமியா ஆகியவை, தலா, 617 டன் கொள்முதல் செய்யும் பணியில், தமிழக நுகர்வோர் கூட்டுறவு இணையம் ஈடுபட்டுள்ளதாம்..
சம்பா ரவை: அந்தவகையில், இப்போதைக்கு "பாம்பினோ" என்ற நிறுவனத்திடம் இருந்து சேமியா, வறுத்த ரவையும், அனில் நிறுவனத்திடமிருந்து சம்பா ரவையும் வாங்கப்பட்டுள்ளதாகவும், அவை, ஒவ்வொரு பள்ளிக்கும் எவ்வளவு தேவை என்று கணக்கிட்டு, ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பப்பட்டு, பிறகு, அங்கிருந்து, ரேஷன் கடைகளுக்கு அனுப்பி பள்ளிகளுக்கு வினியோகம் செய்யும் பணி நடந்து வருதாகவும் சொல்கிறார்கள்.
பள்ளி மாணவர்களுக்கு அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, உள்ளூரில் கிடைக்கும் காய்கறிகளைக்கொண்டு சுத்தமான முறையில் உணவினை தயாரிக்கும்படி சத்துணவு ஆய்வாளர்களுக்கு ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டு வரும்நிலையில், அதை மேலும் செம்மைப்படுத்தும் நோக்கில் இன்னொரு அறிவிப்பையும் தமிழக அரசு வழங்கி உள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை சிற்றுண்டியின் அளவு மற்றும் நேரம் ஆகியவற்றை, சத்துணவு பணியாளர்கள் கைபேசி செயலியில் பதிவேற்றம் செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

அதாவது, ஒவ்வொரு மாணவர்களுக்கும் எவ்வளவு உணவு வழங்கப்படுகிறது? உணவு பரிமாறும் நேரம் என்ன? என்பது குறித்த அனைத்து விவரங்களையும், அந்த கைபேசி செயலியில் பணியாளர்கள் பதிவு செய்திருக்க வேண்டுமாம்..
அபாரம்: சத்துணவு பணியாளர்கள் சமையல் தொடங்குவதை காலை 6 மணிக்குள் பதிவேற்றம் செய்யும்படியும், காலை 8.15 மணிக்குள் சமையல் செய்து முடிந்ததை பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் என்றும், காலை 9 மணிக்குள் மாணவர்களுக்கு உணவு பரிமாறுவதை பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் என்றும், காலை 11 மணிக்குள் எத்தனை மாணவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது? என்பது குறித்தும் மொத்த டீடெயிலும் அதில் பதிவாகியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
தமிழக அரசின் இந்த அறிவிப்பானது, மாணவர்களையும், பெற்றோர்களையும் மட்டுமல்லாமல் பொதுமக்களையும் சேர்த்தே குளிர வைத்து வருகிறது.
-
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications