ஆளுநர் ரவி கைக்கு போகப்போகும்.. 19 முக்கிய ஃபைல்கள்.. உற்று கவனிக்கும் திமுக.. என்னங்க நடக்குது?
சென்னை: தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் 2 நாள் நடந்து முடிந்திருக்கிறது. இதில் 19 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவைகள் ஆளுநருக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். இந்த சட்ட மசோதாக்களில் எத்தனை மசோதாக்களுக்கு ஆளுநர் அப்ரூவல் தருவார் என தெரியவில்லை என்கிறார் கள்.
ஆனால், முந்தைய காலங்கள் போல, மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் கால தாமதம் செய்ய மாட்டார்னு நினைக்கிறோம் என்கிறது சட்டப் பேரவை அலுவலக அதிகாரிகள். இரண்டு நாள் பேரவை கூட்டத்தில் ஓ.பி.எஸ். கலந்து கொள்ளவில்லை. கலைஞர் பாணியில், பேரவைக்கு வந்தார். பேரவையின் நுழைவு வாயில் உள்ள லெட்ஜரில் கையெழுத்துப் போட்டுவிட்டு தலைமைச் செயலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார்.

கடந்த சட்டமன்ற கூட்டம் வரையில், அதிமுகவின் சட்டமன்ற எதிர்க்கட்சியின் துணைத் தலைவராக ஓபிஎஸ் இருந்தார். அதனால் அவருக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகே முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, எதிர்க்கட்சித் துணைத்தலைவராக உதயக்குமார் நியமனத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதால், எடப்பாடிக்கு அருகே உதயக்குமாருக்கு இடம் ஒதுக்கப்பட்டதுடன், பின் வரிசைக்கு தள்ளப்பட்டு விட்டார் ஓபிஎஸ். இதனை அவரால் ஜீரணித்துக்கொள்ள முடியாததால், பேரவை கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்கின்றனர்.
ஆளுநர் ஆலோசனை: தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் ஆர். என் ரவியின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதத்தோடு முடிந்துவிட்டது. அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரவீந்திர நாராயண ரவி எனப்படும் ஆர்என் ரவி தமிழக ஆளுநராக பணியாற்றி வருகிறார். இவர் முன்னாள் வெளியுறவுத்துறை, ஐபி அதிகாரி ஆவார். ஆர். என் ரவி ஆகஸ்ட் 1, 2019 முதல் 9 செப்டம்பர் 2021 வரை நாகாலாந்தின் ஆளுநராகவும், மேகாலயா ஆளுநராக 18 டிசம்பர் 2019 முதல் 26 ஜனவரி 2020 வரையிலும் பணியாற்றினார். அவரின் பதவி இன்னும் அதிகாரபூர்வமாக நீட்டிக்கப்படவில்லை.
இதற்கு இடையில்தான் தேசிய பாதுகாப்பு அறிவுரை கழக நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையின் போது தமிழ்நாடு சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும் தமிழக ஆளுநர் ஆர். என் ரவி ஆலோசனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீப நாட்களாக தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு தொடர்பான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நீதிமன்ற வளாகத்தில், பட்டப்பகலில் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் அரிவாளால் கொடுரமாக வெட்டப்பட்டது அதிர்ச்சி அளித்தது. தேசிய பாதுகாப்பு அறிவுரை கழகத்தின் உறுப்பினர்களுடன் ராஜ்பவனில் சீரியஸ் டிஸ்கஸ் நடத்தியிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்த கூட்டத்தில் 10 பேர் கலந்து கொண்டனர். தேசிய பாதுகாப்பு குறித்த பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, தமிழகத்தில் சமீப மாதங்களில் நடந்துள்ள சில சட்டம் ஒழுங்குக்கு எதிரான விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த சில கொலைகள், தாக்குதல்கள் பற்றியெல்லாம் இதில் ஆலோசனை செய்யப்பட்டு உள்ளது. தேசிய பாதுகாப்பு அறிவுரை கழகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து கிடைத்த பல தகவல்களின் அடிப்படையிலும் இந்த ஆலோசனை நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications