எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறாங்க? வங்கி கணக்கிற்கே வரும் ரூ.2000.. தமிழக அரசின் சிறப்பான திட்டம்
சென்னை: மகளிர் உரிமை தொகை, தமிழ் புதல்வன் போன்ற திட்டங்களுக்கு இடையே வங்கி கணக்கிற்கே ரூ. 2000 வழங்கும் புதிய திட்டம் ஒன்றும் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையால் "மாற்றுத் திறனாளிகளின் இறுதிச் சடங்குச் செலவுகளைச் சமாளிக்க நிதி உதவி" என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில், இறந்த மாற்றுத்திறனாளியின் சட்டப்பூர்வ வாரிசுக்கு, இறுதிச் சடங்கு தொடர்பான செலவுகளைச் சமாளிக்க ₹2,000/- நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின்படி இறந்தவரின் சட்டப்பூர்வ வாரிசுக்கு ₹2,000/- நிதியுதவி வழங்கப்படுகிறது.
தகுதி என்ன?: விண்ணப்பதாரர் மாற்றுத் திறனாளிகளின் சட்டப்பூர்வ வாரிசாக இருக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் இறந்திருக்க வேண்டும்.மாற்றுத்திறனாளிகள் மாற்றுத் திறனாளிகள் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட உறுப்பினராக இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பம் செய்வது?: படி 1: ஆர்வமுள்ள விண்ணப்பதாரர் (அலுவலக நேரத்தில்) மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரைச் சந்தித்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வழங்கவும், சேகரிக்கவும் பிரத்தியேகமாக ஒப்படைக்கப்பட்ட ஊழியர்களிடமிருந்து விண்ணப்பப் படிவத்தின் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தின் கடின நகலைக் கோர வேண்டும்.
படி 2: விண்ணப்பப் படிவத்தில், அனைத்து கட்டாயப் புலங்களையும் பூர்த்தி செய்து, அனைத்து கட்டாய ஆவணங்களின் நகல்களையும் இணைக்கவும் (தேவைப்பட்டால், சுய சான்றளிப்பு).
படி 3: முறையாக பூர்த்தி செய்து கையொப்பமிடப்பட்ட விண்ணப்பப் படிவத்தை ஆவணங்களுடன் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் சமர்ப்பிக்கவும்.
படி 4: விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் இருந்து ரசீது அல்லது ஒப்புதலைக் கோரவும். சமர்ப்பித்த தேதி மற்றும் நேரம் மற்றும் தனிப்பட்ட அடையாள எண் (பொருந்தினால்) போன்ற அத்தியாவசிய விவரங்கள் ரசீதில் இருப்பதை உறுதிசெய்யவும்.
தேவையான ஆவணங்கள்: இறப்பு சான்றிதழ்.
சட்டப்பூர்வ வாரிசு சான்றிதழ்.
மாற்றுத் திறனாளிகளுக்கான நல வாரியத்தால் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளின் அசல் தேசிய அடையாள அட்டை.
நிதி உதவி: இப்படி நிதி ரீதியாக தமிழ்நாட்டில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. உதாரணமாக மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் வழங்கப்படும் ரூ.1000 பணத்தை வைத்து நீங்கள் கூடுதல் லாபம் பெற முடியும். இந்த 1000 ரூபாய் உங்களுக்கு குட்டி போட போகிறது.. ஆம் குறிப்பிட்ட வங்கியில் சேமித்தால் அதற்கு கூடுதல் வட்டி கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. அதாவது இந்த தொகைக்கு என்று கூடுதலாக வட்டி கொடுக்கும் நிறைய திட்டங்கள் உள்ளன.
பொதுவாக வங்கியில் பணம் சேமிக்க 3-4 சதவிகிதம் மட்டுமே வட்டி கிடைக்கும். ஆனால் இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 7.5 சதவிகிதம் வரை வட்டி பெறலாம். 5 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தில் பணம் சேர்க்க முடியும். தமிழ்நாடு அரசு இதற்காக மலையரசி தொடர் வைப்புத் திட்டத்தைக் கூட்டுறவு வங்கி திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
நீலகிரியில் தொடங்கப்பட்டு உள்ள இந்த திட்டத்தில் யார் வேண்டுமானாலும் இணையலாம். இதில் இணைந்தால் மகளிர் உரிமைத்தொகை பணத்திற்கு மட்டும் 7.5 சதவிகிதம் வட்டி வழங்கப்படும். சாதாரணமாக வழங்கப்படும் 3-4 சதவிகிதம் வட்டிக்கு பதிலாக இந்த கூடுதல் வட்டியை இந்த மலையரசி தொடர் வைப்புத் திட்டத்தைக் அளிக்கும் நீலகிரி கூட்டுறவு வங்கி வழங்குகிறது.
விரிவாக்கம்: தற்போது மகளிர் உரிமைத்தொகை திட்டம் விரிவாக்கப்படுகிறது. இந்த மாத இறுதிவரை மக்களுக்கு விண்ணப்பங்களை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். அவர்களுக்கு கணக்கில் எப்போது ரூ.1000 வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான புதிய விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
இந்த திட்டத்தில் கடந்த ஜனவரி கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட்டனர். இனி இதுவரை விடுபட்ட பெண்களுக்கும் பணம் அனுப்பப்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது. புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு பணம் வழங்கப்படும். முன்பு முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு பணம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு இந்த முறை பணம் கொடுக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதேபோல் முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கும் பணம் கொடுக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
