இன்று வரப்போகும் ஜாக்பாட் அறிவிப்பு.. தமிழ்நாட்டில் பொங்கல் பரிசாக ரேஷனில் ரூ.1000? கொட்டும் பணம்?
சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத்தொகையாக் ரூ.1000 வழங்க அரசு திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் எல்லா வருடமும் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்படும். கடந்த 2022ம் வருடம் மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. 2023 வருடம் இதையடுத்து பரிசு பொருட்களில் மாற்றம் செய்யப்பட்டது. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்கள் இந்த வருடம் வழங்கப்பட்டது.

அதோடு வழங்கப்படாத மற்ற பொருட்களுக்காக 1000 ரூபாய் பணம் வழங்கப்பட்டது. கரும்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கரும்பு விநியோகம் செய்யப்படவில்லை என்று முதலில் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக அரசியலாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மாற்றம்: முக்கியமாக அதிமுக சார்பாக இதற்கு எதிராக போராட்டமும் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தமிழ்நாடு அரசு துரிதமாக செயல்பட்டு கரும்புகளை கொள்முதல் செய்து மக்களுக்கு கொடுப்போம் என்று அறிவித்தது. கரும்புடன் சேர்த்து 1000 ரூபாய் பணம் வழங்கப்படுவது மக்கள் இடையே வரவேற்பை பெற்றது.
மீண்டும் பரிசுத்தொகை: இந்த நிலையில்தான் மீண்டும் 2024ம் வருட பொங்கல்.. அதாவது அடுத்த மாதம் வர உள்ள பொங்கலுக்காக தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.1000 வழங்க அரசு திட்டம் போட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
ஆதார் எண் அடிப்படையில் ஆய்வு செய்த போது மொத்தமுள்ள 2.20 கோடி ரேஷன்கார்டுதாரர்களில் 14.60 லட்சம் பேருக்கு வங்கிக் கணக்குகள் இல்லை என தெரியவந்துள்ளது. இதனால் ரேஷன் கடைகளில் நேரடியாக ரொக்கமாக பணத்தை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இரண்டு 500 ரூபாய் தாள்கள் மூலம் பணத்தை கொடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
பொங்கல்: இந்த நிலையில் எல்லா வருடமும் பொங்கலுக்கு பரிசுத்தொகை வழங்கப்படும். கரும்பு, வெள்ளத்திற்கு பதிலாக பணமாக பரிசுத்தொகை வழங்கப்படும். இந்த பரிசுத்தொகை இந்த வருடமும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது.
முன்னதாக மகளிர் உரிமை தொகையுடன் சேர்ந்து இந்த பணம் வங்கிகளில் போடப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொங்கல் பரிசுத்தொகை மற்றும் மகளிர் உரிமைத்தொகை இரண்டும் ஒன்றாக வழங்கப்படாது.. தனி தனியாக வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன
ரேஷன் கார்டு உள்ள எல்லோருக்கும் வங்கி கணக்கு விவரங்கள் இல்லை, சிலருக்கு வங்கி கணக்குகள் இல்லை அதனால் இரண்டும் தனியாக வழங்கப்படும். உரிமை தொகை எப்போதும் போல வங்கி கணக்கில் போடப்படும். பொங்கல் பரிசு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் வரும் டிசம்பர் மாதம் மேலும் சில பயனாளிகளுக்கு பணம் அளிக்கப்படும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இந்த திட்டத்தில் மீண்டும் சேர 11.8 லட்சம் பேர் மறு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். அக்டோபர் இறுதிவரை இவர்கள் கொடுத்தனர்.
இதில் விடுபட்டவர்கள் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலனை செய்யப்படுகிறது. இந்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன. அவை ஆய்வு செய்யப்பட்டு கூடுதலாக மேலும்ம் சிலர் திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனராம். தகுதியான நபர்கள் சேர்க்கப்பட உள்ளனர். அவர்களுக்கு அடுத்த மாதம் முதலே பணம் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் பணம் வழங்கும் தேதியான் 15ம் தேதியில் மாற்றம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications