இனி ரூ.5000 அல்ல.. கொத்தாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்! அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்
சென்னை: அரசு ஊழியர்களுக்கான திருமண முன்பணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இனி அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொதுவாக ரூ.5 லட்சம் திருமண முன்பணமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமண முன்பண உயர்வு
அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, அவர்களின் பணிக்காலத்தில் ஏற்படும் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணம் வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக, பெண் ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாயும், ஆண்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. தற்போது, இந்தத் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பொதுவாக ஐந்து லட்சம் ரூபாயாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அதிகரிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. திருமணச் செலவுகளை சமாளிக்க இந்த முன்பணம் உதவியாக இருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர். மேலும், இந்த உயர்வு அரசு ஊழியர்களின் நலனில் அரசு கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்துகிறது என்றும் கூறப்படுகிறது.
திருமண முன்பணத்தை உயர்த்தி அரசு எடுத்துள்ள இந்த முடிவு, அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, திருமணத்தை மகிழ்ச்சியாக நடத்தவும் வழிவகுக்கும்.
தமிழக அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பு
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு என்று கடந்த 30 நாட்களில் மட்டும் ஏகப்பட்ட முக்கியமான அசத்தலான அறிவிப்புகளை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார். அரசு ஊழியர்களை கவரும் விதமாக.. அவர்ளின் பல நாள் கோரிக்கைகளை ஏற்று பல முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த அறிவிப்புகள் என்னனென்ன என்று இங்கே பார்க்கலாம்.
தமிழக அரசு போக்குவரத்து கழக 6% ஊதிய உயர்வு வழங்கப்படும் என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடைசியாக 14வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2023ம் ஆண்டு முடிவடைந்தது.
அரசு ஊழியர்களுக்கு கட்டணமின்றி ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு குறித்து முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீட்டை கட்டணமின்றி வழங்க, புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக, அரசு ஊழியர்களுக்குஇலவசமாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2% உயர்த்தப்பட்டது. இந்த முறை அரசு சார்பாக 2% உயர்வு செய்யப்பட்டதால் நிலை 1 அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் ரூ. 360 ஆக இருக்கும். அதாவது ரூ.360 சம்பளத்தில் உயரும் என்று அறிவிக்கப்பட்டது. 7வது ஊதியக் குழுவின் கீழ், அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் (நிலை 1) ரூ.18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இவர்களுக்கு 360 ரூபாய் அகவிலைப்படி உயர்வு இருக்கும்
அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக் கால முன்பணம் ரூ.10,000ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் கல்வி முன்பணம் தொழிற்கல்விக்கு ரூ.1 லட்சம், கலை, அறிவியல், மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகை ரூ.500ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்வு ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகைக்கால முன்பணம் ரூ.4,000ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்வு அரசு ஊழியர்களுக்கான 1 ஆண்டுகால மகப்பேறு விடுப்பு அவர்களின் தகுதி காண் பருவத்திலும் (Probation Period) கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். முன்பு இருந்த விதிகளின் படி மகப்பேறு விடுப்பு காலமானது தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படாததால் பெண் ஊழியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications