சென்னை பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு சொன்ன தமிழ்நாடு அரசு.. இது மட்டும் நடந்தா எல்லாமே மாறிடும்!
தமிழ்நாடு அரசு மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
சென்னை: சென்னை புறநகர் பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய திட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.
பொது போக்குவரத்து சென்னையில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல இந்த மூன்று ஆப்ஷன்கள் மக்களுக்கு உள்ளன. ஆனால் இது மூன்றிற்கும் மக்கள் தனி தனியாக டிக்கெட் எடுத்து வருகிறார்கள்.
இதை தற்போது மாற்றிவிட்டு, மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு பயன்படுத்தும் நிலையில் இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதாவது ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி இது மூன்றிலும் பயணிக்க முடியும்.

ஒரே பயணசீட்டு
இதற்காக ஒரு கார்ட் அல்லது பாஸ் போன்ற அட்டை வழங்கப்படும். இந்த கார்டை மெட்ரோ நிலையத்தில் ஸ்கேன் செய்து அதில் பயணிக்க முடியும். மின்சார ரயில்களில் செக்கர் சோதனை செய்யும் சமயங்களில் இந்த கார்டை ஸ்கேன் செய்து கொள்ள முடியும். இதற்காக கடந்த 2020ம் ஆண்டில் அனைத்து துறைகளையும் உள்ளடக்கி ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் உருவாக்கப்பட்டது. இந்த குழு சார்பாக தற்போது இது தொடர்பான திட்ட அறிக்கை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம்தான் சென்னை பயணிகளுக்கு என்று இன்னொரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

என்ன பிளான்
அதன்படி சென்னையில் தற்போது கட்டப்பட்டு வரும் சென்னை Chennai Peripheral Ring Road எனப்படும் புறநகர் ரிங் ரோடுடன் சேர்த்து அருகிலேயே ரயில் பாதையில் இன்னொரு கூடுதல் டிராக் அமைக்க முடிவு செய்துள்ளனர். 12000 கோடி ரூபாய்க்கு இந்த சாலை போடப்பட்டு வருகிறது. 2025ல் இந்த சாலை போட்டு முடிக்கப்படும். இந்த சாலை செல்லும் பாதையில் கூடுதலாக ஒரு டிராக் போட திட்டமிட்டு உள்ளனர். புறநகர் மின்சார ரயில்களை இயக்க வசதியாக இந்த டிராக் போடப்படுகிறது. தமிழ்நாடு அரசு மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஆய்வுகளை மாநில அரசு மேற்கொண்டு உள்ளது.

ரயில்வே லைன்
புதிய ரயில்வே லைன் ஒன்றிற்காக மாநில அரசு ஆய்வு மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். மொத்தம் 133 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலைக்கு அமைக்கப்பட உள்ளது. அதே தூரத்திற்கு மின்சார புறநகர் ரயில் அமைக்கவும் முடிவு செய்துள்ளனர். இந்த சாலை எண்ணூர் துறைமுகம் மற்றும் மகாபலிபுரம் இடையே அமைக்கப்படுகிறது. இன்னர் ரிங் ரோடு, சென்னை பைபாஸ் மற்றும் அவுட்டர் ரிங் ரோடுக்கு பிறகு நகரின் நான்காவது ரிங் ரோடாக சிபிஆர்ஆர் இருக்கும். இது தச்சூர், திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சிங்கபெருமாள் கோயில் வழியாக செல்லும். அதேபோல் இந்த ரயில் பாதையும் சாலைக்கு அருகிலேயே அமைக்கப்பட உள்ளது.

ஏற்கனவே உள்ள பாதை
ஏற்கனவே இருக்கும் மின்சார ரயில் பாதையான தாம்பரம் - செங்கல்பட்டு பாதையில் கூடுதலாக ஒரு டிராக் போட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் அரக்கோணம் - காஞ்சிபுரம் பாதையில் கூடுதலாக ஒரு டிராக் போட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பாதையில் அதிக பயணிகள் பயணிக்க வசதியாக கூடுதல் டிராக் போடப்பட்டு உள்ளது. தற்போது இந்த பாதையில் மிக மிக குறைவான எண்ணிக்கையில் மின்சார ரயில்கள் செல்கின்றன. தற்போது தமிழ்நாடு அரசே இங்கே ஆய்வு செய்து ரயில் பாதையை அமைத்து மின்சார ரயிலை அமைக்க உள்ளது. அனைத்து துறைகளையும் உள்ளடக்கி ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் உருவாக்கப்பட்ட நிலையில், அந்த அமைப்பே இந்த பணிகளை செய்ய உள்ளது.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி












Click it and Unblock the Notifications