திருச்சி டூ வேலூர்.. கிழக்கு தொடர்ச்சி மலையின் 33 வட்டாரங்களுக்கு குட்நியூஸ்.. தமிழக அரசு உத்தரவு
சென்னை: கிழக்கு தொடர்ச்சி மலையின் 33 வட்டாரங்களை சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் இணைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களை மத்திய அரசு கைவிட்டதால், மலைப் பகுதிகளை கண்காணிப்பதற்காக எஸ்.ஏ.டி.பி. திட்டம் தொடங்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து திட்டம், மேம்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை வெளியிட்ட அரசாணையில் கூறியுள்ளதாவது: "சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் என்ற எஸ்.ஏ.டி.பி. திட்டம் 2015-16-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களை மத்திய அரசு கைவிட்டதால், மலைப் பகுதிகளை கண்காணிப்பதற்காக எஸ்.ஏ.டி.பி. திட்டம் தொடங்கப்பட்டது.

அந்தப் பகுதிகளில் சிறப்பு கண்காணிப்பை செயல்படுத்துவது மட்டுமல்லாமல், இடதுசாரி பயங்கரவாதத்திற்கு வாய்ப்புள்ள பகுதிகளை கண்காணிக்கவும் இந்தத் திட்டம் உதவுகிறது. அதன்படி, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களுக்காக ஆண்டுக்கு ரூ.75 கோடி ஒதுக்கப்படுகிறது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிதாக தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டு உள்ளதால் அந்த மாவட்டமும் எஸ்.ஏ.டி.பி. திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்தத் திட்டப்படி 100 சதவீத மாநில நிதிப் பங்களிப்புடன் அந்த மலைகளின் இயற்கை சூழல் பாதுகாக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் தமிழக சட்டசபையில் 2023-24-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின்போது, நிதித்துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், எஸ்.ஏ.டி.பி. திட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையும் இணைக்கப்படும் என்று கூறியிருந்தார். சாதாரண பட்ஜெட் ஒதுக்கீட்டுக்குள் வராத மலைப் பகுதிகள் மற்றும் குறிப்பிட்ட மலைவாழ் மக்களுக்காக இந்த திட்ட விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் எஸ்.ஏ.டி.பி. திட்ட இயக்குனர் (உதகமண்டலம்) அரசுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார். அதில், கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள சில வட்டாரங்களை எஸ்.ஏ.டி.பி. திட்டத்தில் சேர்க்கும்படி கோரியிருந்தார். இந்த கோரிக்கையை அரசு கவனமாக பரிசீலித்து, 11 கிழக்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் உள்ள 33 வட்டாரங்களை திட்டத்தில் சேர்க்க அனுமதித்து உத்தரவிடுகிறது.
அந்த வகையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திண்டுக்கல், ஈரோடு. சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 33 வட்டாரங்களை எஸ்.ஏ.டி.பி. திட்டத்தில் சேர்த்து, அங்கு திட்ட செயல்பாட்டை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications