Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தனியார் பேருந்துகளை.. வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு.. திடீரென எடுக்கப்பட்ட முடிவு.. என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை சமாளிக்க தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பேருந்துகளில் வட மாவட்ட பயணிகளின் கூட்ட நெரிசலைச் சமாளிக்க, தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துக்கழகம் புதிய திட்டம் போட்டுள்ளது.

வழக்கமாக, ஊரகப் பகுதிகளில் உள்ள அரசுப்பேருந்துகளை சிறப்புப் பேருந்துகளாக இயக்குவதால், ஊரகப் பகுதி மக்கள் பாதிப்பு அடைந்து உள்ளனர். இதனால், தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து, அதற்கு ஓட்டுநர், நடத்துநரை அரசே நியமித்து இயக்க திட்டம் போடப்பட்டு உள்ளது. S.E.T.C சென்னையிலிருந்து குறிப்பிட்ட ஊர்களுக்கு, எத்தனை முறை பேருந்து இயக்கப்படுகிறது என்ற அடிப்படையில் தனியார் நிறுவனங்களுக்குக் கட்டணம் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. பண்டிகை காலங்களில் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது என்கிறார்கள்.

bus

போக்குவரத்து நெரிசல்: இது போக பண்டிகை காலத்திற்கு முன்பாக.. சென்னையில் இருப்பது போலவே அல்ட்ரா மாடல் ஸ்டைல் கொண்ட புதிய லோ ப்ளோர் பேருந்துகள் தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. முதல் கட்டமாக அசோக் லேலண்ட் பேருந்துகள் சென்னையில் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. 80 பேருந்துகள் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இது போக மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருநெல்வேலி, கும்பகோணம், விழுப்புரம் ஆகிய அனைத்து நகரங்களுக்கும் சென்னையில் இயங்கும் லோ ஃப்ளோர் பேருந்துகள் வழங்கப்பட உள்ளது. 17 முதல் 38 பேருந்துகள் வரை மாவட்டங்களின் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் வாங்கப்பட உள்ளன.

கூடுதல் பேருந்துகள்: சென்னை, மதுரை மற்றும் கோவையில் அல்ட்ரா மாடல் ஸ்டைல் கொண்ட கூடுதல் பேருந்துகளை களமிறக்க ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த பேருந்துகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. நீல நிறத்தில் ஸ்டைலாக இருக்கும் பேருந்துகள் வாங்கப்பட்டு உள்ளன.

இதில் சென்னைக்கான பேருந்துகளை வாங்க, 500 தாழ்தள மின்சார பேருந்துகள் (400 Non A/C & 100 A/C) கொள்முதல் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. 3 ஏலதாரர்கள் தங்கள் ஏலத்தை சமர்ப்பித்துள்ளனர்.
1. ஒலெக்ட்ரா
2. ஸ்விட்ச் மொபிலிட்டி (OHM குளோபல்)
3. ஏரோ ஈகிள் ஆட்டோமொபைல் ஆகியவை போட்டியில் உள்ளான.

பேருந்துகள்; சென்னை, மதுரை மற்றும் கோவையில் நகரத்தில் உள்ள பயணிகள், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள், விரைவில் பயணம் செய்ய மிகவும் எளிதாக இருக்கும், வரும் மாதங்களில் 1552 தாழ்தள, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வகையில் உள்ள உள்ள பேருந்துகளை பெருநகர போக்குவரத்துக் கழகம் பெற உள்ளது.

இந்த வாகனங்கள் ஜேர்மன் அபிவிருத்தி வங்கியின் (KfW) நிதியுதவியின் கீழ் வாங்கப்படும் பேருந்துகளின் லிஸ்ட் ஆகும். தமிழ்நாட்டில் அதிக அளவில் பேருந்துகள் வாங்கப்பட்டு வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

MTC தவிர, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (TNSTC) கோயம்புத்தூர் மற்றும் மதுரைக்கு தலா 100 தாழ்தள பேருந்துகளை இதே ஒப்பந்த முறைப்படி வாங்க உள்ளது. முழுமையாக கட்டப்பட்ட 552 தாழ்தளப் பேருந்துகளை வாங்குவதற்கான செயல்முறை இறுதி கட்டத்தில் உள்ளது, ஒரு வாரத்தில் KfW அதன் அனுமதியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+