ரூ.1000 மட்டுமல்ல.. 24 மணி நேரத்தில்.. தமிழக அரசு தங்கம் மாதிரி வெளியிட்ட 2 முக்கிய அறிவிப்புகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. மக்கள் இடையே வரவேற்பை பெற்ற இரண்டு முக்கியமான திட்டங்களின் விரிவாக்கம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.

காலை உணவு திட்டத்தை அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வரும் ஜூலை 15 முதல் விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. 2024-25 கல்வியாண்டில் கிராமங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

Tamil Nadu Government Notification magalir urimai thogai

காலை உணவு திட்டம்

நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது. பள்ளிகள் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்கு காரணமாக இருக்கிறது. இதனை மனதில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை நாம் தீட்டி இருக்கிறோம். முதற்கட்டமாக சில மாநகராட்சி, நகராட்சிகளிலும், தொலைதூரக் கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் திட்டம் இப்போது அமலில் உள்ளது.

இப்போது 2024-25 கல்வியாண்டில் கிராமங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

மகளிர் உரிமை தொகை திட்டம்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் ஜூலை 15 முதல் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 45 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை இரண்டாவது வாரம் தொடங்கி அக்டோபர் வரை இதற்கான முகாம்கள் நடைபெறும்.

இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், விண்ணப்பதாரர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விதிகள் மற்றும் விஷயங்கள் குறித்து தற்போது பார்க்கலாம். நேற்று வெளியிடப்பட்ட விதிகளின் மூலம் யாருக்கெல்லாம் பணம் கிடைக்காது என்பது உறுதியாகி உள்ளது.

1. அரசு ஊழியர்களுக்கு கிடைக்காது.

2. நேரடியாக அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கிடைக்காது.

3. மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி பணிகளில் இருப்பவர்களுக்கு கிடைக்காது.

4. குறிப்பிட்ட மாநகராட்சி, நகராட்சி பணிகளில் இருப்பவர்களுக்கு கிடைக்காது.

மகளிர் உரிமை தொகை யாருக்கு கிடைக்கும்?

1. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் அறிவுசார் மாற்றுத்திறன். கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன், முதுகுத்தண்டுவடம்/தண்டுவடம் மறப்பு நோய் மற்றும் பார்க்கின்சன் நோய் மாற்றுத் திறன், தசைச்சிதைவு நோய் மாற்றுத்திறன், தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை. இவ்வகைப்பாட்டினர். திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்விதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

ii. இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களிலிருந்து, முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

Ⅲ. வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதிவாய்ந்த பெண்களும் திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து எவ்வித தகுதியின்மை வகைபாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

3. மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினைத் தமிழ்நாடு அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் 29 மாவட்டங்களில் உள்ள 106 முகாம்களில் 19,487 முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கும் விரிவு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் வெளிடப்பட்டன.

4. மாநிலம் முழுவதும் இத்திட்டத்தின் இரண்டாம் கட்ட முகாம்கள் நடத்துவது குறித்து 19.06.2025 அன்று தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த கூட்டத்தில், "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில், மேலும் பெண்கள் பயனடைய ஏதுவாக, ஏற்கனவே உள்ள விதிவிலக்குகளுடன் மேலும் சில விதிவிலக்குகள் வழங்குவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

5. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை விரிவுபடுத்தும் வகையில் இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள விதிவிலக்குகளுடன் கூடுதலாகக் கீழ்க்காணும் விதிவிலக்குகளை வழங்குமாறு அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

i. பல்வேறு அரசு துறைகளின் கீழ் சிறப்பு காலமுறை ஊதியம் (Special Time Scale) பெற்று பணியாற்றி, தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர்கள் அல்லாத தகுதி வாய்ந்த பெண்கள், இத்திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

ii. அரசு திட்டங்களின் கீழ் மானியம் பெற்று அதன் மூலம் நான்கு சக்கர வாகனம் வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பெண்கள், பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எந்தவிதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+