பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை எப்போது தொடங்குகிறது? வந்தாச்சு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான இறுதி தேர்வு எப்போது தொடங்கும் என்ற விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோடை விடுமுறை எவ்வளவு நாட்கள் இருக்கும் என்ற விவரங்களையும் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. +2 மாணவர்களுக்கான தேர்வு கடந்த மார்ச் 3ம் தேதி மொழித் தேர்வுடன் தொடங்கியது. +2 மாணவர்களுக்கான தேர்வு மார்ச் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதேபோல 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 5ம் தேதி மொழி தேர்வுடன் தொடங்கியது. இது வரும் மார்ச் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதற்கிடையே மற்ற வகுப்புகளுக்குத் தேர்வு எப்போது தொடங்கி எப்போது முதல் நடைபெறும்... கோடை விடுமுறை எவ்வளவு நாட்கள் என்பது குறித்த அறிவிப்பைத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 21ம் தேதியுடன் தேர்வுகள் அனைத்தும் முடிகிறது. 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 24ம் தேதியுடன் அனைத்து தேர்வுகளும் முடிகிறது
அட்டவணை
1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை: ஏப்ரல் 15- தமிழ், ஏப்ரல் 16- மொழிப்பாடம், ஏப்ரல் 17- ஆங்கிலம், ஏப்ரல் 21- கணிதம்
4 மற்றும் 5ம் வகுப்பு: ஏப்ரல் 9- தமிழ், ஏப்ரல் 11- ஆங்கிலம், ஏப்ரல் 15- கணிதம், ஏப்ரல் 16- விருப்ப மொழி, ஏப்ரல் 17- சயின்ஸ், ஏப்ரல் 21- சமூக அறிவியல்
அதேபோல 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் ஏப்ரல் 8ம் தேதி தமிழ் தேர்வுடன் தொடங்குகிறது. அது வரும் ஏப்ரல் 24ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது.
அதன்படி தமிழ்நாட்டில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 22ம் தேதி முதலும், 6 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 25ம் தேதி முதலும் கோடை விடுமுறை தொடங்கவுள்ளது.
-
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
Ration Cards: தமிழகத்தில் 46 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுகள் ரெடி! எப்போது கிடைக்கும்? -
வெளியானது தமிழக நிதி நிலை வெள்ளை அறிக்கை! திமுக ஆட்சியில் கடன் 2 மடங்கானதாக குற்றச்சாட்டு! -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்!












Click it and Unblock the Notifications