வெயில் ரொம்ப டேஞ்சர்.. பொதுமக்களுக்கு இலவசமாக ORS கரைசல் வழங்க தமிழக அரசு முக்கிய உத்தரவு!
சென்னை: கோடை வெப்பம் காரணமாக பொதுமக்கள், விவசாய கூலிகள், கட்டுமான தொழிலாளர்களுக்கு மருத்துவமனைகளில் இலவசமாக ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் போதிய ஓ.ஆர்.எஸ் இருப்பில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு வார்டுகள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் வீடுகளுக்குள்ளையே மக்கள் முடங்கிக் கிடக்கும் நிலை உள்ளது. மேலும் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மே 1 ஆம் தேதி முதல் வெப்பநிலை வெகுவாக அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் கோடை காலங்களில் வெப்ப அலையால் 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, உடலில் நீர்ச்சத்து குறைந்து, மயக்கம், வாதம் போன்றவற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் வெப்ப அலையால் பொதுமக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுக்க பொது சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், மாநகராட்சி சுகாதார நிலையங்களிலும் ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து பொது மருத்துவமனைகளிலும் வெயில் பாதிப்பு சிகிச்சைக்காக 'ஹீட் ஸ்ட்ரோக்' என்ற சிறப்பு வார்டு அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், ஹீட் ஸ்ட்ரோக் உயிரிழப்புகளை தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரண்டு படுக்கைகள் வெப்ப பாதிப்பு நோயாளிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புறங்களிலும் உடனடி சிகிச்சை கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
மருந்துகள், அவசர உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விழிப்புணர்வு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெப்ப காலத்தில் உடல்நல பாதிப்புகளைத் தவிர்க்க மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. வெப்ப அலையில் சிக்கி உயிரிழப்போரின் குடும்பத்துக்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள், ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க, மாநில பேரிடர் நிதியை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications