பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்.. பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போவதில் சிக்கல்? தமிழக அரசு தீவிர ஆலோசனை
சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 9-ந் தேதி முதல் அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருப்பதால், பொங்கலுக்கு மக்கள் சொந்த ஊருக்கு போவதில் சிக்கல் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. இதையடுத்து வேலை நிறுத்தத்தை கைவிட வைக்க தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
பொங்கல் பண்டிகை நெருங்கிவிட்டது. சென்னை, கோவை, திருப்பூர், ஓசூர், பெங்களூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, சேலம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வசிப்போர் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகிறார்கள். ஆனால் ரயில்களில் நான்கு மாதத்திற்கு முன்பே டிக்கெட்டுகள் அனைத்தும் தீர்ந்து போனது. ஆம்னி பேருந்துகள் கட்டணம் நினைத்து பார்க்கவே முடியாது. மக்களின் ஒரே நம்பிக்கை அரசு பஸ்கள் தான். இந்த சூழ்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 9-ந் தேதி முதல் அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

என்ன கோரிக்கை: போக்குவரத்து துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படியை உடடியாக வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், கருணை அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை வேண்டும், போக்குவரத்து துறையின் வரவுக்கும், செலவுக்கும் இடையேயான தொகையை பட்ஜெட்டில் அரசு ஒதுக்க வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகள் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கையாக உள்ளது.
போக்குவரத்து கழக நிர்வாகத்தினருக்கு இதுபற்றி, தொழிற்சங்கங்கள் பலமுறை கோரிக்கை வைத்து வருகிறார்கள். பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றும், விரைவில் முடிவு எட்டப்படா விட்டால் வேலை நிறுத்தம் செய்வோம் என்றும் அறிவித்தனர். இந்த சூழலில் சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல கமிஷனர் அலுவலகத்தில் கடந்த டிசம்பர் 27-ந் தேதி தொழிலாளர் நல கமிஷனர், போக்குவரத்து கழக நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எந்த முடிவும் அப்போது எட்டப்படவில்லை.
இதனையடுத்து ஜனவரி 3ம் தேதியான நேற்று மாலை 3 மணி அளவில், மீண்டும் தொழிலாளர் நல கமிஷனர், போக்குவரத்து கழக நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தொழிலாளர் நல இணை கமிஷனர் ரமேஷ் பங்கேற்றார். நிர்வாகம் தரப்பில் மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஆல்பின் ஜான் வர்கீஸ், விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்றனர். தொழிற்சங்கங்கள் தரப்பில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த, பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற, காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில், தொழிற்சங்க நிர்வாகிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது தொழிற்சங்கங்கள், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை பொங்கலுக்கு முன்பாக வழங்க வேண்டும். பிற கோரிக்கைகளுக்கு வேண்டுமானால் காலஅவகாசம் வழங்க தயாராக இருப்பதாக அறிவித்தன. ஆனால் அதற்கு அரசு தரப்பில் சரியான பதில் கிடைக்கவில்லை என்று தொழிற்சங்கள் குற்றம்சாட்டின. இதையடுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த காரணத்தால் வரும் ஜனவரி 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளன. இதில் திமுகவின் தொழிற்சங்கமான தொமுச, அதிமுகவின் தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கம், கம்யூனிஸ்டுகளின் தொழிற்சங்கமான சிஐடியு உள்பட அனைத்து தொழிற்சங்கங்களும் ஒற்றுமையாக போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்படி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஈடுபட்டால் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதையடுத்து அரசு இந்த விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறது.
இதனிடையே போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றன.
கடந்த அதிமுக ஆட்சியில் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உரிய காலத்தில் முடிக்காமல், தொழிலாளர்களை நிர்கதியாக நிற்கவைத்தது. எந்த கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை, தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் சீர்குலைக்கப்பட்ட ஊதிய விகிதம், மீண்டும் சீரமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஊதியமும் 5 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டது. எந்த போராட்டமும் நடத்தாமல், எந்த ஒடுக்கு முறையையும் சந்திக்காமல் தொழிலாளர்களுக்கு இவை கிடைத்துள்ளன.
நடப்பாண்டு மகளிர் கட்டணமில்லா பயணத்திற்கு ரூ.2 ஆயிரத்து 800 கோடி, டீசல் மானியம் ரூ.2 ஆயிரம் கோடி, மாணவர் இலவச பஸ் பயணம் ரூ.1,500 கோடியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்ததுடன், போக்குவரத்து கழகம் சிறப்பாக செயல்படவும் காரணமானவர். அத்துடன் புதிய பஸ்கள் வாங்க நிதி ஒதுக்கி, புதிய பணியாளர்கள் நியமனத்திற்கு அனுமதி அளித்து, துறை சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுத்துள்ளார். அதிமுக ஆட்சிக்காலத்தில் தீபாவளி போனஸ் குறைத்து வழங்கப்பட்டதை, யாரும் கோரிக்கை வைக்காமலேயே மீண்டும் 20 சதவீதமாக உயர்த்தி ரூ.16 ஆயிரத்து 800-ஐ முதல்வர் வழங்கினார். இதற்கும் எந்த போராட்டமும் நடத்தப்படவில்லை. மக்கள் மனமறிந்து செயல்படுவது போலவே, தொழிலாளர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுகிறார்.
போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு, வாரிசு அடிப்படையிலான பணி போன்றவைகள் நிறைவேற்றி தரப்பட்டு உள்ளது. பேரிடர் நேரத்தில் உடனடியாக களம் இறங்கி பஸ்களை வழக்கம் போல் இயக்கி, மக்கள் இயல்பு நிலைக்கு வர முன் நின்றவர்கள் போக்குவரத்து துறை தொழிலாளர்கள். அதேபோல தொழிற்சங்கங்களும் முதல்வருக்கும், பொதுமக்களுக்கும் இந்த பேரிடர் நேரத்தில் உறுதுணையாக நிற்க வேண்டுகிறேன்.
எனவே, பணியில் உள்ள தொழிலாளர்கள், ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும். பொங்கல் விடுமுறைக்கு பின்பு தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பிரச்சினைகளும் தீர்க்க உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். எனவே போக்குவரத்து கழகத்தை சார்ந்த தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் இதனை கருத்தில் கொண்டு போராட்ட அறிவிப்பை கைவிட வேண்டுகிறேன்" இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறியிருந்தார்.
இதனிடையே அமைச்சரின் கோரிக்கை குறித்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.. ஜனவரி 9ம் தேதி தான் வேலை நிறுத்தம் அறிவித்திருப்பதால், அதற்குள் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை வேலைநிறுத்தம் நடந்தால், பொங்கல் வரை தொடரும் பட்சத்தில் அது, மக்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் பரபரப்பு நிலவுகிறது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications