அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! அக்டோபர் 1 முதல் அமலாகிறது ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண்டர் இந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலாகும் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது முன்கூட்டியே அமலாகிறது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவித்திருந்தனர். அவர்களது கோரிக்கைகளில் முக்கியமான மீண்டும் ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்ய அனுமதித்து பணப்பலன் வழங்க வேண்டும் என்பதுதான்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதாக, பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். அதன்படி 15 நாட்கள் வரை விடுப்பை சரண் செய்து பணப்பலன்களை பெறலாம்.
முன்னதாக கொரோனா காலகட்டத்தில் அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ஈட்டிய விடுப்பு சரண் முறையை மீண்டும் அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். கடந்த ஏப்ரல் மாதம் தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது முதல்வர் ஸ்டாலின் விதி எண் 110 இன் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அப்போது முதல்வர் உரையில் 1 - 4 - 2026 முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 15 நாட்கள் வரை ஈட்டிய விடுப்பை சரண் செய்து பணபயன் பெறலாம் என அறிவித்தார். இதனால் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் மகிழ்ச்சி அடைந்தாலும் இந்த நடைமுறையை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் ஈட்டிய விடுப்பு சரண் இந்த ஆண்டே வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. பட்ஜெட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது முன்கூட்டியே அமலாகிறது.
-
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications