மாஸ்டர்பிளான் ரெடி.. தமிழ்நாட்டில் மாற்றப்படும் 42 முக்கிய பகுதிகள்.. உங்க ஏரியா லிஸ்டில் இருக்கா?
சென்னை: மத்திய அரசின் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் 42 நகரங்கள் மாற்றப்பட உள்ளன. இதற்கான மாஸ்டர் பிளான்களை தயாரிக்கும் பணியை நான்கு ஆலோசகர்களுக்கு தமிழ்நாடு மாநில அரசு வழங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் வரும் நகரங்களில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படும். அதன்படி தேனி அல்லிநகரம், போடிநாயக்கனூர், அருப்புக்கோட்டை, நாமக்கல், எடப்பாடி, மேட்டூர், கள்ளக்குறிச்சி, திண்டிவனம் மற்றும் அரக்கோணம் ஆகியவை அடங்கும். கரூருடன் இனாம்கரூர், தாந்தோணி ஆகிய பகுதிகள் வளர்க்கப்பட உள்ளன. அதேபோல் சிவகாசியில் உள்ள திருத்தங்கல் இந்த திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட உள்ளது. ஒப்பந்தத்தின் தோராயமான செலவு சுமார் ₹32 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3,647 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

திட்டங்களைத் தயாரிக்க ஆலோசகர்களுக்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படும். முதலில், 50 நகரங்களை உள்ளடக்கும் யோசனை இருந்தது. ஆனால் மலைப்பாங்கான பகுதிகளைக் கருத்தில் கொண்டு மீதமுள்ள நகரங்களை தற்போதைய பட்டியலிலிருந்து பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக பிரத்யேக ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று நகர மற்றும் கிராம திட்டமிடல் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களில் ஒருவரான ருத்ராபிஷேக் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (REPL) வெளியிட்ட அறிக்கையில், "திட்டமிடப்பட்ட மற்றும் நிலையான வளர்ச்சியை கொண்டு வருவதற்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மேம்பட்ட ஜிஐஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திட்டமிடப்பட்ட நகரங்களை உருவாக்குவதற்கான இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.
50 நகரங்களுக்கான மாஸ்டர் பிளான்களை தயாரிப்பதற்கான ஏலத்தை மாநில அரசு வெளியிட்டு உள்ளது. மதுராந்தகம், திருத்தணி, சின்னமனூர், கீழக்கரை, அறந்தாங்கி, திருத்துறைப்பூண்டி, சீர்காழி, பவானி ஆகிய ஊர்கள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த பரப்பளவு சுமார் 3,190 சதுர கிலோமீட்டர் மற்றும் மதிப்பிடப்பட்ட செலவு, ₹21.8 கோடி.
வடசென்னை வளர்ச்சி: இதேபோல் சென்னையில் வடசென்னை வளர்க்கப்பட உள்ளது. சென்னையில் தென்சென்னை தொடர்ந்து வளர்ந்து வந்தாலும் இன்னும் வடசென்னை பெரிதாக வளர்ச்சி அடையவில்லை. இந்த நிலையில்தான் வடசென்னையின் வளர்ச்சியை குறி வைத்து தமிழ்நாடு அரசு முக்கியமான "பிக் ப்ராஜெக்ட்" திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.
அதன்படி வடசென்னை வளர்ச்சியை மையப்படுத்தி, அங்கே உள்ள குறைகளை போக்க, 1,000 கோடி ரூபாய் செலவில், 'வடசென்னை வளர்ச்சி திட்டம்' என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வடசென்னையை மொத்தமாக உருமாற்றம் விதமாக இந்த பணிகள் தொடங்க உள்ளன. அங்கே அடிப்படை வசதிகள் தொடங்கி அல்டிமேட் வசதிகள் வரை பலவற்றை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
மக்கள் குஷி: அதன் ஒரு கட்டமாகவே வடசென்னையில் ஒரு காலத்தில் மிகப்பெரிய அளவில் குப்பையாக.. காலி மதுபாட்டில்களோடு இருந்த இந்த இடம் தற்போது மாற்றப்பட்டு உள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு இந்த பகுதி திறந்து விடப்படும். மக்கள் இடையே இந்த புதிய பார்க் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
தென்சென்னை அளவிற்கு அல்லது தென்சென்னையை விட சிறப்பாக சென்னையை வளர்க்கும் முடிவில் இந்த 'வடசென்னை வளர்ச்சி திட்டம்' கொண்டு வரப்பட்டு உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) சார்பாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications