Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயில் விநியோகம் இனி என்னாகும்? தமிழக அரசு பெரிய முடிவு எடுக்க போகிறதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024-25 ஆம் ஆண்டில் ரேஷனில் விநியோகிக்கப்படும் துவரம் பருப்பு பாமாயில், இரண்டு பொருட்களுக்கான மானியம் ரூ. 3,800 கோடியாக இருப்பதால், அதனை மாற்ற தமிழக அரசு பரிசீலித்து வருகிறதாம். துவரம் பருப்பு, பாமாயிலை அதிக மானிய விலையில் வழங்க வேண்டாம் என தமிழக அரசுக்கு நிதித் துறை அறிவுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவதற்காக, 2007ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதியால் சிறப்புப் பொது விநியோகத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்கு தமிழக அரசு முழுமையாக நிதியளிக்கிறது. இதன் மூலமே பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பல்வேறு மானிய விலையில் வழங்கப்படுகின்றன.

ration shop ration card Tamil Nadu

2024-25 ஆம் நிதியாண்டில் ரேஷனில் வழங்கப்படும் பாமாயில், துவரம் பருப்புக்கு மானியம் ரூ 3,800 கோடியாக இருக்கிறது. இதனை சாமானிய மக்கள் பலர் வாங்குகிறார்கள். இதனை ஒவ்வொரு மாதமும் 1.6 முதல் 1.9 கோடி கார்டுதாரர்கள் வாங்குகின்றனர்.

இந்நிலையில் துவரம் பருப்பு மற்றும் பாமாயிலை மானிய விலையில் வழங்கும் விவகாரத்தில் ஒரு பெரிய மாற்றத்தை செய்ய தமிழக அரசு பரிசீலித்து வருகிறதாம். தொடர்ந்து அதிக மானிய விலையில் பாமாயில் துவரம் பருப்பு ஆகியவற்றை வழங்குவதைத் தொடர வேண்டாம் என்று நிதித் துறை சார்பில் மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் கூறியுள்ளனவாம்.

தமிழக அரசு வட்டாரங்கள் கூறும் தகவலின் படி, விற்பனை விலையை அதிகரித்து அதன் மூலம் மானியங்களைக் குறைக்க அரசு உத்திகளை கையாளக் கூடுமாம். இதேபோல், சமையல் எண்ணெய் விநியோகத்தை ஓரளவு கட்டுப்படுத்தி, அதனை பெற தகுதிக்கான அளவுகோல்களை அறிமுகப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளதாம். இதுபற்றி தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் (டிஎன்சிஎஸ்சி) மற்றும் சிவில் சப்ளைஸ் கமிஷனரேட் ஆகியவற்றின் அதிகாரிகள் விளக்கம் அளித்தால்தான், உண்மை நிலவரம் என்னவென்று நமக்கு தெரியவரும்.

தமிழ்நாட்டில் ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களுக்கான அரசின் மானியம் 2014-15 ஆம் ஆண்டில் ரூ.1,800 கோடியாக இருந்தது. தற்போது அது இரு மடங்காக அதிகரித்து 3800 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்த சிறப்பு மானியத் திட்டம் 2007ம் ஆண்டு தொடங்கப்பட்டபோது, ​​துவரம் பருப்பின் கொள்முதல் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.50 ஆகவும், எண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.45 ஆகவும் இருந்தது.

ஆனால் அப்போது ரேஷனில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் முறையே கிலோ ரூ.30க்கும், ரூ.25க்கும் விற்கப்பட்டது. அதன் பிறகு, கொள்முதல் விலை பன்மடங்கு அதிகரித்தாலும் பாமாயில் மற்றும் துவரம் பருப்பின் விற்பனை விலை அப்படியே தான் இன்று வரை உள்ளது.

2023ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் (TNCSC ) ஒரு கிலோ பருப்பை சராசரியாக ரூ.100 முதல் ரூ.105க்கு வாங்கியது. இது வெளிச் சந்தையில் விலை உயர்வால் 2024 ஜனவரியில் இருந்து ரூ.120-ரூ.125 ஆக அதிகரித்து இருந்தது. ஆனால் கடந்த மாதம், டிஎன்சிஎஸ்சி துவரம் பருப்பை கிலோ ஒன்றுக்கு ரூ.150 முதல் ரூ.155 வரை கொள்முதல் செய்ததாக சொல்கிறார்கள். அதிக சந்தை விலை காரணமாக பல கோடி ரூபாய் வரை அரசுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டு வருகிறது.

இதேபோல், சமையல் எண்ணெய்யின் சராசரி கொள்முதல் விலை கடந்த ஆண்டு பிப்ரவரியில் 80 ரூபாயில் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் 90 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, துவரம் பருப்புக்கு அரசால் வழங்கப்பட்ட மானியம் (கொள்முதல் விலைக்கும் விற்பனை விலைக்கும் உள்ள வேறுபாடு) 2007 இல் ஒரு கிலோவுக்கு ரூ.20 லிருந்து ஜூன் 2024 இல் ஒரு கிலோவுக்கு ரூ.120 ஆக அதிகரித்திருக்கிறது.

அதேபோல, சமையல் எண்ணெய்க்கான மானியம் 2007-ல் லிட்டருக்கு ரூ.20-ல் இருந்த நிலையில், 2024ம் ஆண்டு ஜூனில் ரூ.65-ஆக அதிகரித்துள்ளது.இந்த ஜூலையில் சாதாரண துவரம் பருப்பின் சந்தை விலை கிலோவுக்கு ரூ.170-லிருந்து ரூ.180-ஆக விற்கப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.210 முதல் 220 வரை விற்பனையாகிறது.

இதனிடையே துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய இரண்டு பொருட்களையும் ஆகஸ்ட் மாதத்திற்கான பொது விநியோகத் திட்டம் மூலம் கொள்முதல் செய்து வழங்க மாநில அரசு இதுவரை உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை மூத்த அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அந்த அதிகாரி கூறுகையில், "மாநிலத்தின் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு, இரண்டு கோடி ரேஷன் கார்டுகளுக்கு துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய இரண்டு பொருட்களையும் தற்போதைய விலையில் தொடர்ந்து வழங்குவது சாத்தியமில்லை. இந்த விவகாரம் தமிழக அரசிடம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

தற்போது, ​​இரண்டு கோடி கிலோ (20,000 மெட்ரிக் டன்) துவரம் பருப்பு மற்றும் இரண்டு கோடி லிட்டர் சமையல் எண்ணெயை கொள்முதல் செய்ய, தமிழக அரசு ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட ரூ.400 முதல் ரூ.420 கோடி வரை செலவிடுகிறது. ஆனால், விற்பனை மூலம் ரூ.100 முதல் ரூ.110 கோடி வரை வசூல் ஆகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் வரை ரூ.260 கோடியாக இருந்த மாதாந்திர மானியம் 2024ம் ஆண்டு மே மாதம் ரூ.310 கோடியாக உயர்ந்திருக்கிறது. மேலும் சந்தை விலை உயர்வு காரணமாக ஆகஸ்ட் முதல் மேலும் இந்த மாதாந்திர மானியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் பயனாளிகள் உட்பட, BPL குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட 1.12 கோடி முன்னுரிமை வீட்டு (PHH) அட்டைகளுக்கு அரிசி, கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை மத்திய அரசு வழங்குகிறது. 1.12 கோடி முன்னுரிமையற்ற குடும்ப (NPHH) அட்டைதாரர்களுக்கான அரிசி முழுவதுமாக மாநில அரசால் மட்டுமே வழங்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+