Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தீபாவளி பண்டிகைக்காக இன்று முதல் 14,000 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்- உதவி எண்கள் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகைக்காக சென்னை உட்பட முக்கிய நகரங்களில் இருந்து இன்று முதல் 14,000 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசு பேருந்துகளுடன் ஒப்பந்த அடிப்படையிலான தனியார் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றையும் சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் நிறுத்தி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் தொடர்பான தகவல்கள் பெறவும் புகார்கள் தெரிவிக்கவும் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்ட நிலையில் வெளூயூரில் வசிப்பவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக இன்று முதல் அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து மொத்தம் 14,000 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

diwali 2024 special buses 2024

சென்னையை அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையம் ஆகியவற்றில் இருந்து எந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்கிற விவரத்தையும் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.

கிளாம்பாக்கத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மதுரை, தூத்துக்குடி, தஞ்சாவூர், கும்பகோணம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், பெங்களூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். மாதவரத்தில் இருந்து ஆந்திர மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் தொடர்பான தகவல்களைப் பெறவும் புகார்களைத் தெரிவிக்கவும் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு 7845700557, 7845727920, 78457 40924 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பேருந்து விவரங்களை அறியலாம். அரசு பேருந்துகள் குறித்த புகார்களைத் தெரிவிக்க 9445014436 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்க 044 2474900, 26280445, 2628 1611 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+