டைட்டன் நிறுவனம் தொடங்கியதில் முக்கிய பங்கு வகித்த தமிழக அரசு.. டிட்கோ சாதனை.. தெரியுமா உங்களுக்கு
சென்னை: உலக அளவில் இன்று முன்னணியில் இருக்கக் கூடிய நிறுவனமாக டைட்டன் உள்ளது. இந்த நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக இருப்பது தமிழக அரசின் டிட்கோ- தான் என்பது உங்களுக்கு தெரியுமா? டைட்டன் நிறுவனம் ஓசூரில் தொடங்கப்பட்டது முதல் டிட்கோ முதலீடு செய்தது எப்படி என்பது பற்றிய சுவாரசிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.
இன்று உலகம் முழுவதும் பல நிறுவனங்களின் கைக்கடிகாரங்கள் பிரபலமாக உள்ளன. அவற்றில் முக்கியமான கைக்கடிகார நிறுவனங்களில் ஒன்று டைட்டன். டாடா நிறுவனத்தின் தயாரிப்பான டைட்டன் கைக்கடிகாரங்கள் உருவாவதற்கு தமிழ்நாடு அரசுதான் காரணம் என்பது தெரியுமா? இதுபற்றிய சுவாரசியமான தகவல்கள் வருமாறு:-

டிட்கோவுக்கு மட்டும் உரிமம்
1970களில் 'லைசன்ஸ் ராஜ்' உச்சத்தில் இருந்த கால கட்டம் அது. நமது நாட்டில் அப்போது, மத்திய அரசு நிறுவனமான ஹெச்.எம்.டி எனப்படும் ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் மட்டுமே கடிகாரங்களைத் தயாரிக்க உரிமம் பெற்றிருந்தது. சிறிய நிறுவனங்கள் உள்ளூர் அளவில் தயாரித்துக்கொள்ளலாம்.
பெரிய நிறுவனங்கள் எதற்கும் கடிகாரம் தயாரிக்க அனுமதி இல்லாமல் இருந்தது. அப்போது டாடா நிறுவனம் கடிகாரம் உற்பத்தியில் களம் இறங்க திட்டமிட்டது. ஆனால், உரிமம் கிடைக்கவில்லை. இதனால், தமிழக அரசின் தொழில் மேம்பாட்டு கழகமான டிட்கோவுடன் கை கோர்க்க திட்டமிட்டது.
அந்த சமயத்தில் கை கடிகாரங்களை தயாரிக்கும் நிறுவனம் அமைப்பதற்காக பிரான்சு நிறுவனம் ஒன்றுடன் தொழில் நுட்ப பரிமாற்றத்திற்காக பேசிக்கொண்டு இருந்தது. அப்போது டாடா நிறுவனத்திடம் இது குறித்து டிட்கோ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. வாட்ச் தயாரிப்பில் ஆர்வமாக இருந்த டாடா நிறுவனமும் இந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்தது. ஆனால்,வாட்ச் தயாரிப்பில் டிட்கோவுக்கு மட்டும் உரிமம் வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறியது.
ஓசூரில் ஆலையை தொடங்கியது
இதையடுத்து, டாடா தனது பெயரை குறிப்பிடாமல் மற்றொரு பெயரில் விண்ணப்பம் செய்தது. உரிமம் கிடைத்த பிறகு தமிழ்நாடு மற்றும் டாடா நிறுவனத்தின் பெயரை சேர்த்து டைட்டன் என்ற பெயரில் ஓசூரில் ஆலையை தொடங்கியது. டைட்டன் நிறுவனத்தில் மிகப்பெரிய பங்குதாரராக டிட்கோ உள்ளது. டிட்கோவிடம் 27.88 சதவீத பங்குகள் உள்ளன. டாடா குழுமத்திடம் 25.02 சதவீத பங்குகள் உள்ளன.
ஒரு பங்கை கூட விற்பனை செய்யவில்லை
டைட்டன் நிறுவனத்திற்காக டிட்கோ வழங்கியது என்னவென்றால், உரிமம், ஓசூரில் தொழிற்சாலைக்கான இடம், உள்ளூர் நிர்வாகத்தின் உதவி ஆகியவற்றை வழங்கியது. டாடா நிறுவனம் செய்தது என்னவென்றால், முதலீடு, தொழில் நுட்பம், மேலாண்மை ஆகியவற்றை மேற்கோண்டது. ஒது ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இல்லை. தொழிற்துறை கூட்டமைப்பாக இருந்தது.
மேனேஜ்மேண்ட் என்று பார்த்தால் டிட்கோ நிறுவனம் சேர்மனை நியமனம் செய்தது. டாடா மேலாண்மை இயக்குநரை நியமித்தது. இருவருக்குமே அவரவர் பொறுப்புகள் எது என்று வரையறுக்கப்பட்டதால் ஈகோ பிரச்சினைக்கோ தலையீடுகளுக்கோ வழி இன்றி சுமூகமாக இயங்கியது. டைட்டன் நிறுவனம் வளர வளர பங்குகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் டிட்கோ ஒரு பங்கை கூட விற்பனை செய்யாமால் இருந்தது.
நெட்டிசன்கள் பாராட்டு
அசுர வளர்ச்சி பெற்ற டைட்டன் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 3.2லட்சம் கோடியாக உள்ளது. இதில், டிட்கோவின் 27.88 சதவீத மதிப்பு 89 ஆயிரம் கோடியாகும். டைட்டன் நிறுவனத்தின் 25.02 சதவீத பங்கு மதிப்பு 80 ஆயிரம் கோடியாகும். 10 கோடியில் இருந்து 89 ஆயிரம் கோடியாக டிட்கோவின் முதலீடு 40 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. 90 ஆயிரம் கோடிகள் + டிவிடண்ட்களை டிட்கோ ஈட்டியுள்ளது.
டைட்டன் உருவான நிகழ்வு சமூக வலைத்தளங்களில் தற்போது வைரல் ஆகியுள்ள நிலையில், டிட்கோ நிறுவனத்தின் திறன்மிகு செயல்பாடு உள்ளிட்டவற்றை ஈர்க்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் பலரும் பாராட்டி பதிவிட்டு வருகிறார்கள்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications