பெரும் ஏமாற்றத்தில் பாஜக.. ஒரே உத்தரவில் 2 மாங்காய் அடித்த எடப்பாடியார்.. வேல் யாத்திரைக்கு தடை!
வேல் யாத்திரைக்கு தடை விதித்தது நீதிமன்றம்
சென்னை: பாஜக நடத்த திட்டமிட்டுள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி தர முடியாது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, எடப்பாடியார் அரசு ஒரே கல்லில் ரெண்டு மாங்காயை வீழ்த்தி உள்ளது.
நாளை திருத்தணியில் தொடங்கி டிசம்பர் 6 வரை திருச்செந்தூரில் வேல் யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டிருந்த நிலையில் வேல் யாத்திரைக்கு அனுமதி தர தமிழக அரசு மறுத்து விட்டது...

இதற்கு தமிழக அரசு சார்பில் வாதிடும்போது, "கொரோனா இரண்டாவது அலை, மூன்றாவது அலை பரவலுக்கான வாய்ப்பு உள்ளதால் வேல் யாத்திரையை அனுமதிக்க முடியாது" என்றார்.
பாஜக சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில் தனி மனித இடைவெளி கடைபிடிக்கப்படுவதாகவும், எங்கும் தங்கும் எண்ணம் இல்லை கொரோனா தொற்று குறைந்திருப்பதாக அரசு கூறியுள்ள நிலையில் தடை விதிப்பது சரியல்ல என்றும் வாதிடப்பட்டது. எனினும் கோர்ட் அனுமதி மறுத்துள்ளது
வேல் யாத்திரை விவகாரம் அறிவித்ததில் இருந்தே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான்.. எனினும், இதன் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று யாரும் யூகிக்க முடியாமல் இருந்த நிலையில், தற்போது நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து அரசியல் நோக்கர்கள் சிலரிடம் பேசினோம். அவர்கள் சொன்னதாவது':
நீதிமன்ற உத்தரவை விமர்சிக்க முடியாது.. அதேசமயம், இது சரியான முடிவுதான்.. இந்த விஷயத்தில் திமுகவை பாஜக காரணம் காட்டுகிறது.. மக்களை சந்திக்க, கொரோனா காலங்களில் மக்களுக்கு உதவி செய்ய பாஜக மேற்கொள்ளவிருக்கும் யாத்திரைக்கு அனுமதி மறுக்கும் மாநில அரசு, திமுகவின் கூட்டங்களுக்கு எப்படி அனுமதி தருகிறார்கள்? என்று கேள்வி எழுப்புகிறது.
எடப்பாடியார் அரசை பொறுத்தவரை திமுக என்றில்லை, யாராக இருந்தாலும்சரி, தொற்றுக்கு பாதிப்பு என்றால், அதை தடை செய்திருக்கவே செய்யும்.. ஒருவேளை இந்த யாத்திரைக்கு அனுமதி தந்திருந்தால், அடுத்து திமுக தாங்கள் ஒரு ஊர்வலம் நடத்தி கொள்கிறோம் என்று வந்து அனுமதி கேட்டால் என்ன செய்வது? அதனால் அரசு ஆரம்பத்திலேயே இதற்கு மறுப்பு சொன்னது சரியே.
மற்றொருபுறம் எதிர்க்கட்சிகள் எல்லாம் கலவரம் நிகழலாம் என்று ஒரு கருத்தை முன்வைத்து, யாத்திரைக்கு தடை கேட்டார்கள்.. கலவரம் நடக்கும் என்று முன்கூட்டியே நாம் எப்படி சொல்ல முடியும்? அப்படி கலவரம் நடத்தினால், அது பாஜகவுக்குதான் மைனசாக போகும் என்று தெரியாதா? அதனால் முழுக்க முழுக்க பாஜகவை குறை சொல்ல முடியாது.. அவர்கள் தரப்பு அனுமதியை, சட்டப்படி கேட்டார்கள்.. அணுகினார்கள். அதில் தவறில்லை. ஆனால் ஒன்று, மதத்தை வைத்து ஓட்டு வாங்கி வெற்றிபெற முடியாத ஒரே மாநிலம் தமிழகம்தான்.
இப்போது இந்த யாத்திரையை தடுத்து நிறுத்தியதன் மூலம், பாஜகவுக்கு பணிந்த அரசு இது இல்லை என்பதை எடப்பாடியார் மீண்டும் நிரூபித்துள்ளார்.. அதேசமயம், கொரோனா காலத்தில், மக்கள் நலனே தங்கள் நலன் என்பதையும் நிரூபித்துள்ளார்.. இவ்வளவு நாள் எதிர்க்கட்சி வேல்யாத்திரைக்கு தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தாலும், தன் பாணியிலேயே சென்று இதை ஆஃப் செய்துள்ளார் எடப்பாடியார்" என்றனர்.
-
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications