மணிப்பூர் தமிழர்கள் நிலைமை அறிய தமிழ்நாடு அரசு குழு செல்கிறது? மாநில அரசுடன் பேச்சுவார்த்தை?
சென்னை: இனவன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் வசிக்கும் தமிழர்கள் நிலைமை குறித்து அறிய தமிழ்நாடு அரசு குழு ஒன்றை அம்மாநிலத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மணிப்பூரில் கடந்த 3 மாதங்களாக இன மோதல்கள் நீடித்து வருகின்றன. மைத்தேயி- குக்கி இனக்குழுக்களிடையேயான இந்த மோதல்களில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் இணையசேவைகள் முடக்கப்பட்டுள்ளதால் இந்த வன்முறையின் கோரமுகம் முழுமையாக வெளிப்படவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக மணிப்பூரில் குக்கி இனக்குழு பெண்களுக்கு எதிராக மைத்தேயி இனக்குழுவினர் கொடூரமாக நடந்து கொள்ளும் வீடியோக்கள் வெளியாகி உலகையே அதிர்ச்சி அடைய வைக்கின்றன. பெண்கள் கூட்டு பலாத்காரம், பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலம், பெண்கள் உயிரோடு எரிப்பு என மிக மோசமான வன்முறைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
மணிப்பூரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வசித்து வருகின்றனர். மணிப்பூரில் பணி மற்றும் கல்விக்காக சென்ற தமிழர்கள் ஒரு பக்கம்- மணிப்பூரின் மோரே நகரில் (மியான்மர் எல்லையில்) 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் 4,000 தமிழர்கள் இன்னொரு பக்கம் என உள்ளனர். மோரே நகரில் குக்கி- மைத்தேயி இனக்குழு மோதலில் தமிழர்களும் சிக்கிக் கொண்டனர். 30க்கும் மேற்பட்ட தமிழர்கள் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. 1996-ம் ஆண்டு மோரே நகரில் மிக மோசமான வன்முறை வெடித்தது. இதில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்திருந்தனர். இதனால் மோரே தமிழர்கள் தற்போதும் அச்சத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை மோரே தமிழ்ச் சங்கத் தலைவர் சேகர் நேரில் சந்தித்தும் உரையாடியிருந்தார்.
இந்நிலையில் மணிப்பூர் தமிழர்கள் நிலைமை குறித்து அறிவதற்காக தமிழ்நாடு அமைச்சர் ஒருவர் தலைமையில் அதிகாரிகளை உள்ளடக்கிய உயர்நிலை குழு ஒன்று விரைவில் அம்மாநிலம் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மணிப்பூர் தமிழர் நிலைமை தொடர்பாக அம்மாநில அரசுடன் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தும் எனவும் கூறப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications