பிரபல கோயில் ஆவணங்களில் சாதியின் பெயரை சேர்த்த தமிழக அரசு உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி
சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலின் பெயரில் உள்ள ஆவணங்களில், சாதியின் பெயரை சேர்த்த அரசு உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனரான ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள மல்லசமுத்திரம் என்கிற ஊரில் சோழீஸ்வரர் கோவில், அழகுராய பெருமாள் கோவில், செல்லாண்டி அம்மன் கோவில் ஆகியவை ராஜேந்திர சோழனால் திருப்பணிகள் செய்யப்பட்ட, ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த கோவிலின் அறங்காவலர்களாக வெவ்வேறு சாதிகளை சேர்ந்த மூவரை அறங்காவலர்களாக மட்டுமே 1974ல் நியமிக்கப்பட்டதாகவும், அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள இந்த கோவில்கள் உள்ள நிலையில், அவற்றின் சில சொத்துக்களில் கோவிலின் பெயருக்கு முன் குறிப்பிட்ட சாதியின் பெயரை சேர்த்து அரசு ஆவணங்களில் திருத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, கோவிலின் சொத்து ஆவணங்களில் கோவிலின் பெயருக்கு முன்னால், விழியன்குல கொங்குநாட்டு வெள்ளாளர் என சேர்த்து 1997ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தமிழக செட்டில்மெண்ட் அதிகாரி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, கோவிலின் பெயரில் மட்டும் ஆவணங்களை மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கோவிலை நிர்வகிக்கும் அதிகாரம் மட்டுமே அறங்காவலர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதி, அறங்காவலர் என்கிற பெயரில் கோவிலை நிர்வகிக்கும் பொறுப்பு என்பது "பொதுக் கோவில்" என்கிற தன்மையை மாற்ற முடியாது என தெளிவுபடுத்தியதுடன், ஆயிரம் ஆண்டுகள் பழமையான, தற்போது அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவிலின் பெயருக்கு முன்னால், குறிப்பிட்ட சாதிப் பெயரை சேர்ப்பது என்பது, தவறாக புரிந்துகொள்ளும் சூழலை உருவாக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே கோவிலின் சொத்து ஆவணங்களில் அதன் பெயருக்கு முன்னால் உள்ள சாதிப் பெயரை சேர்த்த செட்டில்மெண்ட் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்த நீதிபதி, சொத்து ஆவணங்களில் கோவில் பெயர் மட்டுமே இடம்பெறும் வகையிலான நடவடிக்கையை 8 வாரங்களில் முடிக்க வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications