கோவை, சேலத்தில் மோசமாகும் பாதிப்பு.. தமிழகத்தில் ஒரே நாளில் 5958 பேருக்கு தொற்று.. 118 பேர் பலி
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5958 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 118 பேர் பலியாகி உள்ளனர். இன்று ஒரே நாளில் 5,606 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 75,500 ஆர்டி பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிகையும் 6 ஆயிரம் என்கிற நிலையிலேயே தொடர்ந்து நீடிக்கிறது. ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கையும் 52 ஆயிரம் என்கிற அளவிலேயே உள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5958 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,97,261 ஆக உயர்ந்துள்ளது.

எங்கு உயிரிழப்பு அதிகம்
தமிழகத்தில் கொரோனாவால் இன்று 118 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 6,839 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இன்று சென்னையில் 20 பேரும், கோவையில் 10 பேரும், காஞ்சிபுரத்தில் 8 பேரும், சேலத்தில் 8 பேரும் பலியாகி உள்ளனர். திருநெல்வேலியில் 6 பேரும், தஞ்சாவூரில் 6 பேரும், காஞ்சிபுரத்தில் 5 பேரும், வேலூரில் 5பேரும் பலியாகி உள்ளனர்.

சிகிச்சையில் எத்தனை பேர்
தமிழகத்தில் இன்று 5,606 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3,38,060 பேர் குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 52,362 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1137 பேரும், கோவையில் 359 பேரும், கடலூரில் 333 பேரும், செங்கல்பட்டில் 319 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 13517 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

எவ்வளவு பரிசோதனைகள்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 75,500 ஆர்டி பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 44,22,361 ஆர்டி பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.தமிழகத்தில் இன்று ஒரே நளில் 73,631 தனிநபர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. . தமிழகத்தில் இதுவரை 42,73,123 தனிநபர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 3,97,261 பேர் தொற்றுடன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சென்னை கொரோனா
சென்னையில் இன்று ஒரே நாளில் 1290 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,29,247 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 113092 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 2638 பேர் இதுவரை கொரோனாவால் பலியாகி உள்ளனர். தற்போது சென்னையில் கொரோனா பாதிப்புடன் 13517 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கோவையில் அதிகம்
மாவட்ட நிலவரத்தை பார்த்தோம் என்றால் சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 484 பேரும், சேலத்தில் 451 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரத்தில் 329 பேரும், செங்கல்பட்டில் 294 பேரும், கடலூரில் 286 பேரும், திருவள்ளூரில் 280 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரத்தில் 189 பேரும், தேனியில் 184 பேரும், வேலூரில் 158 பேரும், புதுக்கோட்டையில் 143 பேரும், கன்னியாகுமரியில் 159 பேரும் திருநெல்வேலியில் 156 பேரும் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலேயே மிக குறைவாக நீலகிரியில் இன்று 4 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications