சூப்பர்.. தமிழக அரசு சார்பில் புதிய யூடியூப் ‛TN Nalam 360’ துவக்கம்.. அசத்தல் பிளான் ஏன் தெரியுமா?
சென்னை: தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நோய்கள், சிகிச்சை முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொதுமக்களின் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையிலும் TN Nalam 360 என்ற யூடியூப் சேனல் துவங்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இந்த யூடியூப்பின் நோக்கம் என்ன? இது எப்படி மக்களுக்கு பயன்படும்? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு அரசு என்பது தொடர்ந்து கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பிற மாநிலங்களை காட்டிலும் தொடர்ந்து தமிழ்நாடு அரசு இந்த 2 துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
சுகாதாரத்துறையை பொறுத்தமட்டில் முந்தைய அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக் திட்டம் துவங்கப்பட்டது. இதன்மூலம் மக்கள் பயனடைந்தனர். தற்போதைய திமுக ஆட்சியில் இல்லம் தேடி மருத்துவம் திட்டம் முதியவர்கள் உள்பட அனைவருக்கும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதுதவிர இன்னும் பல திட்டங்கள் மக்களுக்கு பயனளித்து வருகிறது.

யூடியூப் தொடங்க முன்மொழிவு
இந்நிலையில் தான் சமீபத்தில் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனர் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு ஒரு முன்மொழிவு அனுப்பி வைக்கப்பட்டது. அதில், ‛‛தமிழ்நாடு அரசு TN Nalam 360 என்ற பெயரில் யூடியூப் துவங்க அனுமதி அளிக்க வேண்டும். தற்போதைய சூழலில் அனைத்து வயதினரும் யூடியூப் வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்களை இன்னும் எளிதாக நாம் நாட வேண்டியது தொடர்பாக அப்டேட் ஆக வேண்டிய சூழல் உள்ளது. யூடியூப் சேனல் துவங்குவதன் மூலம் நோய் சார்ந்த விழிப்புணர்வு மெசேஜை எளிமையாக மக்களிடம் கொண்டு சேர்க்கலாம். நிபுணர்களின் நேர்க்காணல், பாடல்கள் வாயிலாக சுகாதார அதிகாரிகளால் கொண்டு சேர்க்க முடியும்'' என கூறப்பட்டு இருந்தது.

அரசு அனுமதி
இந்த முன்மொழிவுக்கு தற்போது தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி பொது சுகாதாரத்துறை சார்பில் விரைவில் தமிழ்நாடு அரசுக்கு ‛TN Nalam 360' என்ற யூடியூப் சேனல் துவங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

விழிப்புணர்வு வழங்க..
யூடியூப் சேனல் தொடர்பான முன்மொழிவை அரசு கவனமாக பரிசீலனை செய்தது. பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவ இயக்குனரகத்தின் முன்மொழிவுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதன்மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட உள்ளது.

துவங்கும் நடவடிக்கை
இந்த TN Nalam 360 யூடியூப் சேனல் தமிழ்நாடு பொது சுகாதார ஆராய்ச்சி சங்கத்தின் ஒருபகுதியாக உருவாக்கப்படும். யூடியூப் சேனலை உருவாக்குவதற்கான செலவினங்களை அரசு வழங்கும். இதற்காக தேசிய சுகாதார திட்டம் மற்றும் தமிழ்நாடு சுகாதார திட்டங்களில் இருந்து நிதி பயன்படுத்தப்படும். இதனால் யூடியூப் சேனல் தொடங்குவதற்கான நடவடிக்கையை பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனர் துவங்க வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications