தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் கொரோனா நுழைந்தது எப்போது ?.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 10 பேருக்கு டெல்டா வைரஸ் பாதிப்பு கண்டறிப்பட்டு அவர்கள் குணமடைந்து விட்டதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வெகுவாக குறைந்து ஆறுதல் அளித்து வருகிறது. ஒரு கட்டத்தில் 4,00,000-க்கு மேல் சென்ற தினசரி பாதிப்பு தற்போது 40,000-க்கும் கீழ் குறைந்து விட்டது

ஆனால் நாட்டில் வேகமாக பரவி வரும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் மூன்றாவது அலையை உருவாக்கி விடு மோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

டெல்டா பிளஸ் பாதிப்பு

டெல்டா பிளஸ் பாதிப்பு

நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு இருக்கிறது. தமிழ்நாட்டிலும் 10 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு உள்ளது. இந்த நிலையில் டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஏப்ரல் மாதமே..

ஏப்ரல் மாதமே..

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் நேற்றோ, இன்றோ வந்தது அல்ல.ஏப்ரல், மே மாதங்களிலேயே கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பெங்களுருவில் உள்ள ஆய்வு கூடத்துக்கு அனுப்பப்பட்டது. ஆயிரக்கணக்கான அந்த மாதிரிகளில் 10 மாதிரிகள் மூலம் டெல்டா பிளஸ் வைரஸ் இருப்பதாக கண்டறியப்பட்டது.

Recommended Video

    Delta Plus Virus நிலை என்ன? | Girl Child needs funds | SMA disorder | Oneindia Tamil
    10 பேருக்கு பாதிப்பு

    10 பேருக்கு பாதிப்பு

    இந்த 10 மாதிரிகளில் முதல் நாளில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு இருப்பதாக சொன்னார்கள். அதற்கு அடுத்த நாள் அந்த மாதிரிகளில் இருந்து டெல்டா பிளஸ் பாதிப்பு மூன்றாக உயர்ந்தது. அதன்பின்னர் 9 ஆக உயர்ந்தது. நேற்று இரவு மேலும் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டு 10 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறினார்கள்.

    அச்சம் தேவையில்லை

    அச்சம் தேவையில்லை

    இந்த 10 பேரில் மதுரையை சேர்ந்த ஒருவர் இறந்த பிறகு அவரது உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டன. மற்றபடி மற்ற 9 பேரும் சகஜ வாழ்க்கைக்கு திரும்பி இருக்கிறார்கள். வேலைக்கு செல்கிறார்கள். யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் பரிசோதித்ததில் அவர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. எனவே டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+