மீண்டும் பரபரப்பு.. நேரில் ஆஜரான அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை! என்ன காரணம்?
சென்னை: செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இன்று அமைச்சர் பொன்முடி மீண்டும் ஆஜராகி உள்ளார். இந்நிலையில் தான் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் பொன்முடி. இவர் முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் உயர் கல்வித் துறை அமைச்சராக இருக்கிார். இவர் முந்தைய திமுக ஆட்சியிலும் அமைச்சராக இருந்துள்ளார். அதாவது கடந்த 2006-2011ம் ஆண்டில் முதல்வராக மறைந்த கருணாநிதி இருந்தார்.

அப்போது பொன்முடி கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் செம்மண் குவாரியில் அதிகளவில் செம்மண் எடுத்ததாக புகார் கிளம்பியது. அதோடு அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி (கள்ளக்குறிச்சி திமுக எம்பி), உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012ல் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூலை மாதம் சோதனை நடத்தினர். செம்மண் குவாரி முறைகேடு மூலம் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்தது.
சென்னை, விழுப்புரம் உள்பட பல மாவட்டங்களில் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு அமைச்சர் பொன்முடியும், சென்னையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை தொடர்ந்து அவர் கைது செய்யப்படலாம் எனவும் அப்போது செய்திகள் வெளியானது. ஆனால் பொன்முடி விசாரணைக்கு ஒத்துழைத்ததால் அதிர்ஷ்டவசமாக அவரை அமலாக்கத்துறை கைது செய்யவில்லை.
இதற்கிடையே தான் செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சோதனையின் முடிவில், முக்கிய ஆவணங்களும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்தது. அதோடு 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தான் மீண்டும் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி இன்று அமைச்சர் பொன்முடி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். அவரிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். இதனால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications