அரசு ஊழியர்கள் திருமணத்திற்கு பெறும் முன்பணம் 50 மடங்கு உயர்வு.. 10,000 இல்ல.. 5 லட்சமாக அதிகரிப்பு
சென்னை: அரசு ஊழியர்களுக்கு 20 ஆண்டு கால கோரிக்கையை ஏற்கும் விதமாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். அதேபோல, அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண முன்பணம் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த ஜூலை மாதம் சட்டசபையில் முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சுமார் 9 லட்சம் பேர் அரசு ஊழியர்களாகவும், ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டு ஏப்ரலுக்கு முன்பு வரை பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. அதன்பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு, அதாவது 2003 ஏப்ரலுக்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.

பழைய ஓய்வூதிய திட்டம்
இதற்கு மத்தியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியம் என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இந்த சூழலில்தான் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். அவ்வப்போது போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வூதியம் குறித்த ஆய்வுக்குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. இந்தக் குழு இறுதி அறிக்கை முதல்வர் ஸ்டாலினிடம் கடந்த 30 ஆம் தேதி சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு புதிய ஓய்வூதிய திட்டம் அறிவித்துள்ளது.
"தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்" என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல அரசு ஊழியர்களுக்கு மேலும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருமணச் செலவிற்கான கடன் உதவி
கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை 2022-ம் ஆண்டு முதல் மத்திய அரசிற்கு இணையாக உயர்த்தி வழங்கியதோடு, மத்திய அரசிற்கு இணையாக காலதாமதமின்றி அகவிலைப்படி உயர்வு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, 1.10.2025 முதல் அரசுப் பணியாளர்கள் தங்களது ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்து பணமாகப் பெற்றுக்கொள்ளும் நடைமுறையை மீண்டும் அரசு செயல்படுத்தியுள்ளது.
நாட்டிலேயே வேறு எங்கும் இல்லாத புதிய திட்டமாக, அரசுப் பணியாளர்கள் விபத்தில் உயிரிழக்க நேர்ந்தால் 1 கோடி ரூபாயும், இயற்கை மரணமடைந்தால் 10 லட்சம் ரூபாயும் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. பணியிடை மரணமடையும் அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை திருமணச் செலவிற்கான உதவியாகவும், மேலும் உயர்கல்வி பயில ரூ.10 லட்சம் வரை நிதியுதவியும் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
வீடு கட்டுவதற்கான முன்பணம்
அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்கான கல்வி முன்பணம் தொழில் கல்விக்கு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாகவும், கலை மற்றும் அறிவியல் கல்விக்கு ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அரசுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த திருமண முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களை காட்டிலும் அதிகமாக, தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன்பணம் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
ரூ.10 லட்சமாக உயர்வு
ஒழுங்கு நடவடிக்கைகளால் பணியில் இருந்து ஓய்வு பெறும் நாளன்று தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்படும் சூழ்நிலையை அகற்றி, அரசுப் பணியாளர்களை ஓய்வு பெற அனுமதித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஓய்வூதியப் பணிக் கொடை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு உதவி ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அவர்களுக்கான பொங்கல் பரிசுத் தொகை ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. பெண் அரசு அலுவலர்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications