டிரம்ப் மட்டும்தான் வரி விதிப்பாரா? இனி பெப்சி, கோக்கை புறக்கணிப்போம்! தமிழகத்தில் இருந்து அதிரடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்துள்ள நிலையில் அந்நாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் குளிர்பானங்களை புறக்கணிப்பதாக தமிழக ஹோட்டல்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்திலிருந்து ஜவுளி, தோல் பொருட்கள், ஆபரணங்கள், அமெரிக்காவுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழகத்தின் மொத்த ஏற்றுமதியில் செய்யப்படுகின்றன.

tamil nadu donald trump

தமிழகத்தின் மொத்த ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 31 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் இருந்து ஜவுளி, தோல் பொருட்கள், கடல் உணவுகள், ஆபரணங்கள் உள்ளிட்டவை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களில் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இந்த நிலையில் சோளம், சோயா பீன்ஸ், ஆப்பிள், பாதாம்பருப்பு, எத்தனால் உள்ளிட்டவை மீது இந்தியா வரிகளை குறைக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது. ஆனால் இதை இந்தியா ஏற்கவில்லை.

இதனால் அதிருப்தியில் இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 25 சதவீத வரியை விதித்தார். இதற்கு இந்தியா சார்பில் கடும் எதிர்ப்பு நிலவியது. இந்த நிலையில் உக்ரைன் மீது போர் செய்யும் ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய்யை வாங்குவதாக கூறி, டிரம்ப் மேலும் 25 சதவீத வரியை விதித்தார். இதனால் இந்தியாவுக்கு அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்துள்ளது. இது கடந்த 27ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இந்த வரி விதிப்பால் தமிழகத்தில் அமெரிக்காவுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் ஜவுளிகள் அப்படியே தேங்கிவிட்டன. அது போல் கப்பலில் கொண்டு செல்லப்பட்ட கடல் உணவுகளும் நிறுத்தப்பட்டன. இதனால் தமிழகத்தில் பல துறைகளில் பலர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் பல இடங்களில் ஊதிய குறைப்பு, ஆட்குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் நடந்துள்ளன. இந்த நிலையில் அமெரிக்கா விதித்த வரியை அந்த நாட்டு நீதிமன்றமே எதிர்த்தது. இதற்கு டிரம்போ, வரியை நீக்கினால் அமெரிக்காவே அழிந்துவிடும் என ஏற்க முடியாத ஒரு காரணத்தை தெரிவித்திருந்தார்.

நியூயார்க் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தை நாட போகிறார். இந்த நிலையில் அமெரிக்காவுக்கு பதிலடியாக அங்கிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் குளிர்பானங்களை புறக்கணிக்க போவதாக தமிழக ஹோட்டல் சங்கம் முடிவு எடுத்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பெப்சி, கோககோலா போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் குளிர்பானங்களையும் குடிநீரையும் விற்கிறார்கள். நாமே தரமான குளிர்பானங்கள், குடிநீரை தயாரித்து விற்கிறோம்.எனவே அந்த நாட்டு குளிர்பானங்களை புறக்கணிக்க போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அது போல் போக்குவரத்து உள்பட பல்வேறு வணிகத்தில் ஈடுபட்டுள்ள அமெரிக்க நிறுவனங்களை புறக்கணிக்குமாறு பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். அமெரிக்காவின் வரி விதிப்பு ஹோட்டல்கள் தொழிலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாவிட்டாலும் பிற தொழில்கள் பாதிப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+