திரும்பிய "போகஸ்".. இதுதான் தமிழ்நாடு.. 2022ல் குவிந்த மெகா முதலீடுகள்.. இத்தனை கோடி ரூபாயா!
சென்னை: கொரோனாவிற்கு பின்பாக 2022ல் தமிழ்நாட்டில் மிக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. எப்போதும் முதலீடுகள் செய்வதற்கு ஏற்ற மாநிலம் என்று பாராட்டப்படும் தமிழ்நாடு இந்த வருடமும் முதலீடுகளில் சாதனை படைத்துள்ளது.
2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவை சந்தித்த போதும், கொரோனாவிற்கு பின் பல்வேறு மாநிலங்கள் கடுமையாக கஷ்டப்பட்ட போதும் கூட தமிழ்நாட்டில் முதலீடுகள் குவிந்துள்ளன.
அமெரிக்காவை சேர்ந்த Ford நிறுவனம் சென்னையில் இருந்து வெளியேறிய பின்பும் கூட சென்னையில் முதலீடுகள் சுணங்காமல் திகரித்துள்ளன.

தமிழ்நாடு
2022ம் வருடம் தமிழ்நாடு மொத்தம் 60 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இதில் 1.25 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டது. இதன் மூலம் 75 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலின் இந்த முதலீடுகளை பெறுவதற்காக சில மாதங்களுக்கு முன் வெளிநாடு பயணம் மேற்கொண்டதும், பல்வேறு தெற்காசிய நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக 'Made in Tamil Nadu' என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

முதலீடு
இந்தியாவில் கொரோனா காரணமாக லாக் டவுன் இருந்த 2021 இறுதி கட்டங்களிலும் கூட தமிழ்நாடு வளர்ச்சியை பதிவு செய்தது. இந்த காலகட்டத்தில் வளர்ச்சியை பதிவு செய்த ஒரே இந்திய மாநிலம் தமிழ்நாடு மட்டுமே ஆகும். இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 9.47 சதவிகிதத்தை தமிழ்நாடு பங்களிக்கிறது. 2021-22 நிதியாண்டில் தமிழ்நாடுதான் இந்தியாவில் நம்பர் 2 மாநிலம். தமிழ்நாட்டில் மாநில ஜிடிபி ₹19.02 லட்சம் கோடியில் இருந்து ₹21.79 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது.

கொரோனா
முக்கியமாக தமிழ்நாடு அரசின் 20 ஆயிரம் கோடி ருபாய் மதிப்பு கொண்ட பரந்தூர் விமான நிலையம் வரும் காலங்களில் மேலும் முதலீட்டை இழுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பரந்தூர் விமான நிலையில் 10 கோடி பயணிகளை வருடம் முழுக்க சமாளிக்கும் திறன் கொண்டது. 2029ல் விமான நிலையம் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2031ல் 1 ட்ரில்லியன் பொருளாதாரத்தை அடையும் இலக்குடன் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களையும் வகுத்து வருகிறது.

தற்போது நிலை
முக்கியமாக தொழிற்துறையில் மட்டும் 23 லட்சம் கோடியை முதலீடாக பெறும் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. இது மொத்தம் 46 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ஐடி துறையை விட உற்பத்தி துறை தமிழ்நாட்டின் மாநில ஜிடிபியில் அதிக பங்களிப்பு தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு தற்போது வாகனங்கள், ஜவுளி மற்றும் ஆடைகள், தோல், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் உள்ளிட்ட இரசாயனங்கள், மின்னணுவியல், இயந்திரங்கள் மற்றும் உலோகப் பொருட்கள் உற்பத்தி துறையில் தமிழ்நாடுதான் முன்னிலை வகிக்கிறது.

ஏற்றுமதி
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் இந்த வருடம் தமிழ்நாடு 8.40 சதவிகித பங்களிப்பை கொடுத்துள்ளது. ₹1.90 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் முதலீடுகளை கண்காணிக்க, முதலீடுகளை ஊக்குவிக்க The Guidance Bureau என்ற பிரிவு அரசு மூலம்ம் இயக்கப்பட்டு வருகிறது. முதலீடுகளை கண்காணிக்க, ஊக்குவிக்க, அனுமதி அளிக்க, ஈர்க்க உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் ஒற்றை பிரிவாக இந்த The Guidance Bureau செயல்பட்டு வருகிறது.

ஐடி பார்க்
அதோடு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மதுரை ஐடி பார்க், தூத்துக்குடியில் அமைய உள்ள 1000 கோடி மதிப்பிலான சிப்காட் பார்க், 3500 கோடி ரூபாய் மதிப்பிலான துபாய் லூலு மால் குழுவின் முதலீடுகள், மணலூரில் அமையம் சிப்காட், கிருஷ்ணகிரியில் சூலகிரியில் அமைய உள்ள Future Mobility Park உள்ளிட்ட பல்வேறு 2022ல் தமிழ்நாட்டில் அதிக அளவு முதலீடுகள் ஏற்பட முக்கிய காரணமாக அமைந்தது. அதோடு தமிழ்நாட்டில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் மெட்டா வெர்ஸ், Web 3.0 மீது கவனம் செலுத்தி வருவதாகவும் CII-KPMG ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.

டிரில்லியன்
இது தமிழ்நாடு 1 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைய மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று அந்த ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் பேங்கிங் துறையிலும் தமிழ்நாடு சாதனை செய்துள்ளது. தமிழ்நாட்டில் இந்தியன் வாங்கி 12 சதவிகித வருவாய் உயர்வையும், இந்தியன் ஓவர்சீஸ் வாங்கி 33.2 சதவிகித வருவாய் உயர்வையும் பதிவு செய்துள்ளது. இந்த பல்வேறு வருவாய்கள் காரணமாக 2022ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 1 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications